கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தி.மு.க. கூட்டணி கட்சியினர் போராட்டம்
மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டத்தை திரும்ப பெறக்கோரி கள்ளக்குறிச்சி மாவட் டத்தில் தி.மு.க. கூட்டணி கட்சியினர் போராட் டத்தில் ஈடுபட்டனர்.;
திருக்கோவிலூர்,
மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டம், மின்சார திருத்த சட்டம் ஆகியவற்றை திரும்ப பெற வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி 8-ந்தேதி பாரத் பந்த் எனும் நாடு தழுவிய முழுஅடைப்பு போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த போராட்டத்திற்கு தி.மு.க. கூட்டணி கட்சி உள்பட பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. அதன்படி நேற்று நாடு தழுவிய போராட்டம் நடைபெற்றது. இதையொட்டி பல்வேறு இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டன. மேலும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கள்ளக்குறிச்சியில் பேரணி நடைபெற்றது.
இதற்கு கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ.தலைமை தாங்கினார். மாவட்டஅவைத்தலைவர் ராமமூர்த்தி, மாநில செயற்குழு உறுப்பினர் வக்கீல் செல்வநாயகம், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் காமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த பேரணி கச்சேரி சாலையில் தொடங்கி நான்கு முனை சந்திப்பு, சேலம் மெயின் ரோடு, கடைவீதி, குளத்து மேட்டுத்தெரு, நேபால் தெரு வழியாக சென்று கச்சேரி சாலையில் முடிவடைந்தது. அப்போது வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் நகர செயலாளர் சுப்ராயலு, ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம், முனியன், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் கள் கென்னடி, சண்முகம், லியாகத்அலி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தாகப்பிள்ளை, முன்னாள் நகர செயலாளர் சத்திய மூர்த்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் தனபால் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங் கள் எழுப்பட்டன.
திருக்கோவிலூர்
இதேபோல் தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் திருக்கோவிலூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் டி.என்.முருகன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் எம்.தங்கம், நகர செயலாளர் கோபி என்கிற கோபி கிருஷ்ணன், தலைமை செயற்குழு உறுப்பினர் செல்வராஜ், விழுப்புரம் மத்திய மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வக்கீல் அன்பு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய துணைச் செயலாளர் எம்.கே.சங்கர் வரவேற்றார்.
இதில் நிர்வாகிகள் அய்யார் கோவிந்தராஜ், எல்.தங்கராஜ், தொ.மு.ச. சரவணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் விஜயகுமார், செயற்குழு உறுப்பினர் செந்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகர செயலாளர் செந்தில் சத்யதாஸ், ஒன்றிய செயலா ளர்கள் சிவா தர்மலிங்கம், மாவட்ட நிர்வாகி வெற்றி, தொகுதி செயலாளர் ஈழவளவன், காங்கிரஸ் கட்சியின் நகர தலைவர் கதிர்வேல், வட்டார தலைவர் ரத்தகீர், மாநிலக்குழு உறுப்பி னர் முருகன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் பசீர் அகமது, ஒன்றிய செயலாளர் ரவி, இந்திய ஜனநாயக கட்சி நிர்வாகி ஏழுமலை உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தி.மு.க.தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி என்.கே.வி. ஆதிநாராயண மூர்த்தி நன்றி கூறினார்.
இதேபோல் பகண்டை கூட்டுரோட்டில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் பாண்டுரங்கன் தலைமையில் கூட்டணி கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க., விடுதலை சிறுத்தை கள் கட்சி, காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சியை சேர்ந்த 90 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் பகண்டை கூட்டுரோட்டில் விவசாயி களுக்கு ஆதரவு தெரிவித்து கடைகள் அடைக்கப் பட்டிருந்தன.
தியாகதுருகம்
தியாகதுருகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் அகில இந்திய விவசாய சங்க மாவட்ட செயலாளர் ஸ்டாலின்மணி தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 28 பேரை போலீசாரை கைது செய்தனர். மேலும் அப்பகுதியில் கடை கள்அடைக்கப்பட்டிருந்தன.
சின்னசேலம்
சின்னசேலத்தில் தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் நடந்த சாலை மறியல் போராட்டத்திற்கு தி.மு.க. நகர செயலாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். சின்னசேலம் வடக்கு ஒன்றிய செயலாளர் அன்புமணிமாறன், ஒன்றிய துணைச் செயலாளர் திராவிட மணி, ஒன்றிய பொருளாளர் சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் காங்கிரஸ் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு உள்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 30-க்கும் மேற்பட்டவர்களை சின்னசேலம் போலீசார் கைது செய்தனர். சங்கராபுரத்தில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்திற்கு கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் உதயசூரியன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். இதில் காங்கிரஸ் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய தேசிய முஸ்லிம் லீக் கட்சி உள்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.