வேளாண் சட்டங்களை திரும்ப பெறக் கோரி தஞ்சை மாவட்டத்தில் 49 இடங்களில் சாலை மறியல்
வேளாண் சட்டங்களை திரும்ப பெறக் கோரி தஞ்சை மாவட்டத்தில் 49 இடங்களில் நடந்த மறியல் போராட்டத்தில் பங்கேற்ற 3 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 3,206 பேரை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சாவூர்,
வேளாண் துறையை சீர்திருத்தும் நோக்கில் 3 புதிய சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றி உள்ளது. இது விவசாயிகளின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் என மத்திய அரசு கூறியுள்ளது.
ஆனால் இந்த சட்டங்களால் குறைந்தபட்ச ஆதரவு விலை, மண்டி அமைப்பு உள்ளிட்டவை அழிந்து, விவசாயத்துறை தனியார்வசம் சிக்கிவிடும் என விவசாயிகள் அச்சம் தெரிவித்து உள்ளனர். எனவே இந்த சட்டங்களை திரும்ப பெற விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும் டெல்லியில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து விவசாயிகள் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தை இந்தியா முழுவதும் விரிவுபடுத்தும் வகையில் பாரத் பந்த் என்ற பெயரில் வேலை நிறுத்த போராட்டத்திற்கு அகில இந்திய விவசாயிகள் கூட்டமைப்பு அழைப்பு விடுத்து இருந்தது.
சாலை மறியல்
இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும் தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் தொழிற்சங்கத்தினர் சார்பில் மறியல் போராட்டம், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சை தென்கீழ்அலங்கத்தில் தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், இந்திய ஜனநாயக கட்சி, திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர், தொழிற்சங்கத்தினர் ஒன்று திரண்டனர்.
பின்னர் அவர்கள் அங்கிருந்து மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் துரை.சந்திரசேகரன் தலைமையில் மாநகர செயலாளர் டி.கே.ஜி.நீலமேகம் எம்.எல்.ஏ., தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் சாமி.நடராஜன் ஆகியோர் முன்னிலையில் ஊர்வலமாக புறப்பட்டு காந்திஜிசாலையில் வந்தனர். அவர்கள், பழைய பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணாசிலையை வந்தடைந்தவுடன் சிலையின் அருகே சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எம்.எல்.ஏ.க்கள் கைது
இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் நீலமேகம், செயற்குழு உறுப்பினர் மனோகரன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட துணைச் செயலாளர் கல்யாணசுந்தரம், மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் சந்திரகுமார், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சொக்கா.ரவி, இந்திய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் சிமியோன் சேவியர்ராஜ், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கண்ணன், மாவட்ட தலைவர் செந்தில்குமார், காங்கிரஸ் கட்சி நிர்வாகி வயலூர் ராமநாதன், திராவிடர் கழக மாவட்ட தலைவர் அமர்சிங், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகி ஜெயினுலாபுதீன் உள்பட பல்வேறு கட்சியினர் கலந்து கொண்டனர்.
விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளும் பங்கேற்றனர். இவர்கள் அனைவரும், வேளாண் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினர். இதனால் 20 நிமிடம் பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் சாலை மறியலில் ஈடுபட்ட 2 எம்.எல்.ஏ.க்கள் உள்பட பல்வேறு கட்சி நிர்வாகிகளை துணை போலீஸ் சூப்பிரண்டு பாரதிராஜன் தலைமையிலான போலீசார், கைது செய்து மினிபஸ்கள், போலீஸ் வேனில் ஏற்றி சென்றனர். மொத்தம் 20 பெண்கள் உள்பட 250 பேர் கைது செய்யப்பட்டனர்.
காவிரி உரிமை மீட்புக்குழு
தஞ்சை காந்திஜிசாலை-ஜி.ஏ.கெனால் சாலை சந்திப்பில் காவிரி உரிமை மீட்புக்குழுவினர் நேற்று ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள், ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் தலைமையில் ஊர்வலமாக புறப்பட்டு வந்தனர். அவர்கள் இர்வின்பாலம் அருகே பழைய நீதிமன்ற சாலை-காந்திஜிசாலை சந்திப்பில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இதில் பொருளாளர் மணிமொழியன், விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சி தலைவர் குடந்தை அரசன், தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ஜெகதீசன், தமிழ் தேசிய பேரியக்க மாவட்ட செயலாளர் வைகறை, தலைமை செயற்குழு உறுப்பினர் பழ.ராஜேந்திரன், பெரியகோவில் தரைக்கடை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயக்குமார், காவிரி உரிமை மீட்புக்குழு நிர்வாகி துரை.ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் சாலை மறியலில் ஈடுபட்ட 65 பேரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி சென்றனர்.
காவிரி விவசாயிகள் சங்கம்
தஞ்சை ரெயிலடியில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதற்கு மாநில தலைவர் புண்ணியமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மணி, மாவட்ட தலைவர் பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு, மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியதுடன், வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தினர். பின்னர் அவர்கள் சாலை மறியல் செய்ய முயன்றனர். இதனால் இவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி சென்றனர். மொத்தம் 100 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சி லெனினிஸ்ட் சார்பில் தஞ்சை விளார் சாலையில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாநகர மக்கள் பாதுகாப்பு இயக்க கவுரவ தலைவர் அருணாசலம் தலைமை தாங்கினார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இவர்களை போலீசார் கைது செய்தனர்.
3,206 பேர் கைது
இதேபோல் மாவட்டத்தில் கும்பகோணம், ஒரத்தநாடு, பாபநாசம் உள்ளிட்ட 49 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற 248 பெண்கள் உள்பட 3 ஆயிரத்து 206 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களில் தி.மு.க.வை சேர்ந்த தஞ்சை, திருவையாறு, ஒரத்தநாடு தொகுதி எம்.எல்.ஏ.க்களும் அடங்குவர்.