நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் புதிதாக 32 பேருக்கு கொரோனா

நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் புதிதாக 32 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

Update: 2020-12-09 02:13 GMT
தென்காசி,

நெல்லை மாவட்டத்தில் நேற்று 14 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதில் நெல்லை மாநகர பகுதியைச் சேர்ந்தவர்கள் 6 பேர், பாளையங்கோட்டை யூனியன் பகுதியைச் சேர்ந்தவர் ஒருவர் ஆவர். இதுதவிர மானூர், வள்ளியூர் ஆகிய ஊர்களைச் சேர்ந்தவர்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. மாவட்டத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை 14 ஆயிரத்து 990 ஆக உயர்ந்துள்ளது.

தென்காசி மாவட்டத்தில் நேற்று 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் தென்காசி, சங்கரன்கோவில், செங்கோட்டை, குருவிகுளம் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் ஆவர். இந்த மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 8,144 ஆக உயர்ந்துள்ளது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகின்றன. நேற்று மாவட்டத்தில் 12 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 806 ஆக உள்ளது. இதில் 15 ஆயிரத்து 531 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது அரசு ஆஸ்பத்திரிகளில் 136 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை 139 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக இறந்து உள்ளனர்.

மேலும் செய்திகள்