ஆயுர்வேத டாக்டர்களுக்கு அறுவை சிகிச்சை அனுமதியை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

ஆயுர்வேத டாக்டர்களுக்கு அறுவை சிகிச்சை அனுமதியை ரத்து செய்யக்கோரி திருவாரூரில் அரசு டாக்டர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2020-12-09 01:10 GMT
திருவாரூர்,

அலோபதி டாக்டர்கள் செய்து வந்த அறுவை சிகிச்சையை இனி ஆயுர்வேத டாக்டர்களும் செய்யலாம் என அனுமதி அளிக்கும் வகையில் மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதனால் நோயாளிகள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரியும், நிதிஆயோக் அமைத்துள்ள குழுக்களை கலைக்க வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் திருவாரூர் அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனை முன்பு நடைபெற்றது.

கோஷம் எழுப்பினர்

இந்திய மருத்துவ சங்க திருவாரூர் கிளை மற்றும் அரசு டாக்டர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அரசு டாக்டர்கள் சங்க மாவட்ட தலைவர் லெனின் தலைமை தாங்கினார். இந்திய மருத்துவ சங்க கிளை தலைவர் கண்ணபிரான், அரசு டாக்டர்கள் சங்க மாநில செயலாளர் சுரேஷ், மாவட்ட செயலாளர் சிவபாலன், இந்திய மருத்துவ சங்க மாவட்ட செயலாளர் செந்தில், பொருளாளர் சபரிசன், பல் டாக்டர்கள் சங்க தலைவர் மதன், செயலாளர் அரவிந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட டாக்டர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

மேலும் செய்திகள்