அரசியல் தலைவர் படத்தை மார்பிங் செய்து பதிவிட்ட பா.ஜனதா பெண் கவுன்சிலர் கைது
அரசியல் தலைவர் படத்தை மார்பிங் செய்து முகநூலில் பதிவேற்றிய பா.ஜனதா பெண் கவுன்சிலர் கைது செய்யப்பட்டார்.;
மும்பை,
மும்பை காந்திவிலி பகுதி மாநகராட்சி கவுன்சிலராக இருப்பவர் சுரேகா பாட்டீல். பா.ஜனதா கட்சியை சேர்ந்தவர். இவர் சம்பவத்தன்று காந்திவிலியில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சென்று உள்ளார். அப்போது அங்கு இருந்த அரசியல் தலைவர் ஒருவரின் படத்தை அவர் படம் பிடித்து கொண்டதாக தெரிகிறது. பின்னர் அவா் அந்த படத்தை மார்பிங் செய்து முகநூலில் பதிவேற்றம் செய்து உள்ளார்.
இதுகுறித்து சாம்தா நகர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகார் குறித்து போலீசார் வேண்டும் என்றே மத உணர்வுகளை புண்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் கவுன்சிலர் சுரேகா பாட்டீலை கைது செய்தனர்.
அரசியல் தலைவர் ஒருவரின் படத்தை மார்பிங் செய்து முகநூலில் பதிவேற்றம் செய்ததற்காக பெண் கவுன்சிலர் கைது செய்யப்பட்ட சம்பவம் மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.