மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விவசாயிகள் சங்கம், அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம்-மறியல் போராட்டம்
முழு அடைப்பு போராட்டத்தையொட்டி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் 2 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 1,169 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுக்கோட்டை,
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி டெல்லியில் வடமாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக தமிழகத்திலும் விவசாயிகள், அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் 3 சட்டங்களையும் திரும்ப பெறக்கோரி நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்தை டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் அறிவித்தனர். இதற்கு அரசியல் கட்சியினர், விவசாயிகள் சங்கத்தினர் ஆதரவு தெரிவித்தனர்.
அதன்படி கோரிக்கையை வலியுறுத்தியும், டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக புதுக்கோட்டையில் நேற்று விவசாயிகள் சங்கத்தினர், தொழிற்சங்கத்தினர், அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதிய பஸ் நிலையம் அருகே அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தொ.மு.ச. மாவட்ட தலைவர் ரத்தினம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், சி.ஐ.டி.யு.வினர் உள்பட தொ.மு.ச., ஏ.ஐ.டி.யு.சி. உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
சங்கை ஊதி போராட்டம்
இதேபோல விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட தலைவர் ராமையா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கம்யூனிஸ்டு கட்சிகளை சேர்ந்தவர்கள், அமைப்பினர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். வக்கீல்கள் சங்கம் சார்பில் புதுக்கோட்டையில் கோர்ட்டு அருகே மாவட்ட தலைவர் ஆறுமுகம் தலைமையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கோர்ட்டு பணியை புறக்கணித்தனர். விவசாயிகளுக்கு ஆதரவாகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் சங்கு ஊதும் போராட்டம் உழவர் சந்தை முன்பு மாவட்ட செயலாளர் நியாஸ் அகமது தலைமையில் நடைபெற்றது. இதில் சிலர் சங்கினை ஊதினர். விவசாயிகளின் கோரிக்கைக்கு பிரதமர் காது கொடுத்து கேட்க வேண்டும் என்பதற்காக இந்த நூதன போராட்டத்தை நடத்தியதாக நிர்வாகிகள் தெரிவித்தனர். பழைய பஸ் நிலையம் அருகே மார்க்சிஸ்ட் லெலி னிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மக்கள் நீதிமய்யம் சார்பில் சரவணன் தலைமையிலும், பழைய பஸ்நிலையம் அருகே ஜாக்டோ, ஜியோ அமைப்பினரும், மின்வாரிய அலுவலகம் முன்பு மின்வாரிய ஊழியர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆவுடையாா்கோவிலில் அறந்தாங்கி முன்னாள் எம்.எல்.ஏ.யும், ஆவுடையார்கோவில் ஒன்றிய தி.மு.க.செயலாளருமான உதயம் சண்முகம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் கணேசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தாலுகா செயலாளர் நெருப்பு முருகேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஆவுடையார்கோவிலிலில் புதுக்கோட்டை தெற்கு மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் பொன்பேத்தி சுந்தரபாண்டியன் தலைமையிலும், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் பாரதிராஜா மற்றும் ஆவுடையார் கோவில் ஒன்றிய குழு தலைவர் உமாதேவி, புண்ணிய வயல் ஒன்றியக்குழு உறுப்பினர் செந்தில்குமரன் முன்னிலையிலும் மறியல் நடைபெற்றது. இதில் தி.மு.க. கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு பெண் உட்பட 25 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
அன்னவாசல்
இலுப்பூரில் இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி இணைந்து தர்மராஜன் தலைமையில் மறியலில் ஈடுபட்டனர். இதில் பங்கேற்ற 100-க்கும் மேற்பட்டவர்களை இலுப்பூர் போலீசார் கைது செய்தனர்.
அரிமளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அனைத்து விவசாய கூட்டமைப்பு சார்பில் அரிமளத்தில் மாநில பொருளாளர் சங்கர் தலைமையிலும், கே.புதுப்பட்டி சாமுண்டி முக்கத்தில் மாவட்ட கவுன்சிலர் கலைவாணி சுப்பிரமணியன் தலைமையிலும் மறியல் போராட்டம் நடைபெற்றது.
கீரனூர்-ஆலங்குடி
கீரனூரில் தி.மு.க. கூட்டணி கட்சி சார்பாக காந்தி சிலை முன்பு 100-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆலங்குடியில் தி.மு.க. கூட்டணி கட்சியினர் சந்தைப்பேட்டைடையிலிருந்து திருவரங்குளம் தி.மு.க. மேற்கு ஒன்றியச்செயலாளர் தங்கமணி தலைமையில் கலைஞர் சாலைவழியாக ஊர்வலமாக வந்து ஆலங்குடி வடகாடு முக்கத்தில் சாலைமறியலில் ஈடுபட்டனர். பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவர்களை கைது செய்தனர்.
திருமயம்-பொன்னமராவதி
திருமயத்தில் ரகுபதி எம்.எல்.ஏ. தலைமையில் நடந்த மறியல் போராட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ ராம.சுப்புராம் உள்பட 189 பேர் கைது செய்யப்பட்டனர். பொன்னமராவதியில் தி.மு.க.கூட்டணி கட்சி சார்பில் ஒன்றிய செயலாளர் அடைக்கலமணி தலைமையில் 150-க்கும் மேற்பட்டோரும், பின்பு மதியம் 12 மணியளவில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் 40-க்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.
கீரமங்கலம்
கீரமங்கலத்தில் ஆலங்குடி தொகுதி எம்.எல்.ஏ. மெய்யநாதன் தலைமையில் சாலைமறியலில் ஈடுபட்ட தி.மு.க.கூட்டணி கட்சியினர் 200 பேர் கைது செய்யப்பட்டனர். அதே போல கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் வாடிமாநகர் கடைவீதியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் செங்கோடன் தலைமையில் தி.மு.க. கூட்டணி கட்சியினர் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் ஏர்கலப்பைகளுடன் வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களையும் கீரமங்கலம் போலீசார் கைது செய்தனர். மாவட்டம் முழுவதும் 12 இடங்களில் போராட்டம் நடைபெற்றது. இதில் எம்.எல்.ஏ.க்கள் ரகுபதி, மெய்யநாதன் உள்பட மொத்தம் 1,169 பேர் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
அறந்தாங்கி-மணமேல்குடி
அறந்தாங்கியில் மறியலில் ஈடுபட்ட நகர காங்கிரஸ் தலைவர் வீராசாமி தலைமையில் 42 பேர் கைது செய்யப்பட்டனர். மணமேல்குடியில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் சக்திராமசாமி தலைமையில் கிழக்கு கடற்கரை சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.