மத்திய அரசின் வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு பாதிப்பு சென்னிமலையில் கனிமொழி எம்.பி. பேச்சு
மத்திய அரசின் வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என சென்னிமலையில் கனிமொழி எம்.பி. கூறினார்.
சென்னிமலை,
‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்ற பரப்புரையை கனிமொழி எம்.பி. மேற்கொண்டு வருகிறார். இதற்காக சென்னிமலைக்கு வந்த அவர் அங்குள்ள குமரன் சதுக்கத்தில் உள்ள சுதந்திர போராட்ட தியாகி கொடிகாத்த குமரனின் உருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதைத்தொடர்ந்து வேனில் நின்றபடி அவர் பொதுமக்கள் மத்தியில் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
அரசியல் சாசனத்தை மாற்றுவதற்கு மத்திய பா.ஜ.க. அரசு துடிக்கிறது. மத்திய அரசு நிறைவேற்றி உள்ள 3 வேளாண் சட்டங்களும் விவசாயிகளை பாதித்து உள்ளது. மத்திய பா.ஜ.க. அரசு கொண்டு வந்த பண மதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி. வரி ஆகியவற்றால் பெருமளவில் தொழில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. தேசிய கணக்கு அடிப்படையில் 25 சதவீதம் பேருக்கு வேலை இல்லை. ஆனால் தமிழ்நாட்டில் 50 சதவீதம் பேர் வேலை இல்லாமல் தவித்து வருகிறார்கள்.
இலவச மின்சாரம்
மேலும் கைத்தறி மற்றும் விசைத்தறி தொழிலும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் 5 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடைபெற்றுள்ளது.
இதனால் நெசவாளர்களின் வாழ்க்கை தற்போது கேள்விக்குறியாக உள்ளது. நெசவுத்தொழிலை விட்டு விட்டு பலர் வேறு வேலைக்கு சென்றுவிட்டார்கள். தமிழகத்தில் உள்ள தொழிலாளர்கள் தற்போது மற்ற மாநிலங்களுக்கு வேலை தேடி சென்று விட்டனர். இதற்கு முடிவு கட்ட 5 மாதம் பொறுத்து கொள்ளுங்கள். தி.மு.க. ஆட்சி வரும். அப்போது பெண்களுக்கான, நெசவாளர்களுக்கான, விவசாயிகளுக்கான சுயமரியாதையை, பாதுகாப்பை மீட்போம்.
இவ்வாறு அவர் பேசினார்.
கருத்தரங்கு
இதைத்தொடர்ந்து அவர் சென்னிமலை பொறையன்காட்டில் உள்ள தனியார் ஏற்றுமதி நிறுவனத்துக்கு சென்று தயாராகும் ஜவுளிகளை பார்வையிட்டார். அப்போது அங்கு பணிபுரிந்த தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுடன் அவர் கலந்துரையாடினார். பின்னர் அங்கிருந்து அறச்சலூர் ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்துக்கு சென்றார். அங்கு நடந்த பெண்கள் கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசினார்.
கனிமொழி எம்.பி.யுடன், திருப்பூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மு.பெ.சாமிநாதன், திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் இல பத்மநாபன், தி.மு.க. சுற்றுச்சூழல் அணி மாநில செயலாளர் கார்த்திகேய சேனாபதி, சென்னிமலை தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் எஸ்.ஆர்.எஸ்.செல்வம் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.