காவேரிப்பாக்கம் ஏரி கடைவாசல் மதகுகளை எம்.எல்.ஏ.க்கள் திறந்து வைத்து மலர் தூவினர்

காவேரிப்பாக்கம் ஏரி கடைவாசல் மதகுகளை எம்.எல்.ஏ.க்கள் திறந்து வைத்து, தண்ணீரில் மலர் தூவினர்.

Update: 2020-12-08 05:48 GMT
காவேரிப்பாக்கம் ஏரி கடைவாசல் மதகுகளிலிருந்து வெளியேறும் தண்ணீரை எம்.எல்.ஏ.க்கள் மலர் தூவி வரவேற்ற காட்சி
மிகப்பெரிய ஏரி
தமிழகத்தில் 3-வது பெரிய ஏரியாகவும், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் மிகப் பெரிய ஏரியாகவும் காவேரிப்பாக்கம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த பரப்பளவு 3,968 ஏக்கர் ஆகும். ஏரி நிரம்பி வழியும் காலங்களில் விவசாயிகள் 3 போகம் பயிர் சாகுபடி செய்யலாம். ஏரி நிரம்பி வழியும் காலங்களில் நரி மதகு, சிங்க மதகு, மூல மதகு, பள்ளமதகு உள்பட 10 மதகுகள் வாயிலாக கால்வாய் மூலம் நேரடியாக தண்ணீர் பெறப்பட்டு 6,278 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயம் செய்யப்படுகிறது.

தற்போது ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் அண்மையில் பெய்த மழையால் பாலாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு வாலாஜாவை அடுத்த அணைக்கட்டு பகுதியில் இருந்து காவேரிப்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இதனால் ஏரியில் தற்போது 28 அடி அளவுக்கு தண்ணீர் நிரம்பி உள்ளது.

சிறப்பு பூஜை
ஏரியின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நிரம்பியுள்ள தண்ணீரை ராணிப்பேட்டை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் சு.ரவி எம்.எல்.ஏ., சோளிங்கர் ஜி.சம்பத் எம்.எல்.ஏ. ஆகியோர் கடைவாசல் பகுதியில் உள்ள 30 மதகுகள் மற்றும் மகேந்திரவாடி ஏரிக்கு 9 மதகுகள் என 39 மதகுகள் மூலமாக 500 கன அடி தண்ணீரை திறந்து வைத்து மலர் தூவினர். அதன் மூலம் பெரியவளையம், தர்மநீதி, சிறுவளையம், துறையூர், ரெட்டிவலம், தென்மாம்பாக்கம், வேட்டாங்குளம், புன்னை உள்ளிட்ட 41 ஏரிகள் பயன் பெறும்.

முன்னதாக தியாமுகச்சேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் ஹரிதாஸ் தலைமையில் ஏரிகரை பகுதியில் உள்ள அன்னியம்மனுக்கு மேள தாளம் முழங்க, ஊர்வலமாக வந்து மஞ்சள், குங்குமம், தாலிகயிறு, வஸ்திரம் உள்ளிட்ட மங்கல பொருட்களுடன் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.

நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை உதவி செயற்பொறியாளர் விஸ்வநாதன், உதவி பொறியாளர் சந்திரன், நெமிலி தாசில்தார் ராஜராஜசோழன், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் ராஜா, காவேரிப்பாக்கம் நகர செயலாளர் ஆர்.வி.என்.மஞ்சுநாதன், மாநில அண்ணா தொழிற்சங்க இணைச் செயலாளர் தணிகாசலம், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் வி.பழனி, ஒன்றிய அவைத் தலைவர் 
கோவிந்தசாமி, மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளர் மாரிமுத்து, ஒன்றிய துணைச் செயலாளர் கரும்பாத்தை, ஜெயலலிதா பேரவை ஒன்றிய தலைவர் ரங்கநாதன், பேரூர் அவைத் தலைவர் ஆறுமுகம், பேரூர் பொருளாளர் ரங்கு, முன்னாள் சேர்மன் சரவணன், மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் வீரன், பேரூர் தகவல் தொழில் நுட்ப நகர செயலாளர் பார்த்திபன், பா.ம.க. மாநில இளைஞர் அணி துணைத் தலைவர் தட்சணாமூர்த்தி, சோளிங்கர் மேற்கு ஒன்றிய செயலாளர் பெல்.கார்த்திகேயன், வாலாஜா ஒன்றிய எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் பூண்டி.பிரகாஷ், 
வருவாய் ஆய்வாளர் தியாகராஜன், கிராம நிர்வாக அலுவலர்கள், ரகு, சவுந்தரராஜன், நவீன் மற்றும் விவசாயிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்