கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் படகு சவாரி மீண்டும் தொடக்கம் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
8 மாதங்களுக்கு பிறகு கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் படகு சவாரி மீண்டும் தொடங்கியது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கொடைக்கானல்,
‘மலைகளின் இளவரசி‘யான கொடைக்கானலில், சுற்றுலா பயணிகளின் கண்களை கொள்ளை கொள்ளும் இயற்கை எழில் கொஞ்சும் பல்வேறு இடங்கள் உள்ளன. அதிலும், நகரின் மையப்பகுதியில் நட்சத்திர வடிவில் அமைந்துள்ள நட்சத்திர ஏரி சுற்றுலா பயணிகளின் மனதில் நீங்காத இடம் பிடிக்கும். அங்கு படகு சவாரி செய்ய சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டுவர்.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம், கொடைக்கானல் நகராட்சி மற்றும் தனியார் சார்பில் நட்சத்திர ஏரியில் படகுகள் இயக்கப்பட்டு வந்தன. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலியாக, கடந்த மார்ச் மாத இறுதியில் நட்சத்திர ஏரியில் படகு சவாரி ரத்து செய்யப்பட்டது.
மீண்டும் தொடக்கம்
இந்தநிலையில் கொடைக்கானல் நகர் மற்றும் வனப்பகுதியில் உள்ள சுற்றுலா இடங்கள் திறக்கப்பட்டன. இதனை பார்வையிட சுற்றுலா பயணிகளின் கூட்டம் கொடைக்கானலில் அலைமோதுகிறது. அதேநேரத்தில், முக்கிய பொழுது போக்கு அம்சமாக திகழ்ந்த படகு சவாரியை மீண்டும் தொடங்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.
இதைக்கருத்தில் கொண்டு கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் படகு சவாரி நேற்று முதல் தொடங்கப்படும் என்று சப்-கலெக்டர் சிவகுரு பிரபாகரன் அறிவித்தார். இதையடுத்து தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்துக்கு சொந்தமான 9 படகுகள் நேற்று முதல் இயக்கப்பட்டன. சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.
அதேநேரத்தில் நகராட்சிக்கு சொந்தமான படகுகளை இயக்குவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, உரிய உத்தரவு கிடைத்தவுடன் படகு போக்குவரத்து தொடங்கப்படும் என்றனர். 8 மாதங்களுக்கு பிறகு நட்சத்திர ஏரியில் படகு சவாரி தொடங்கப்பட்டதால் அனைத்து தரப்பு மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதற்கிடையே படகு சவாரி தொடங்கப்பட்ட சில மணி நேரத்தில் பலத்த காற்று வீசியது. கனமழை கொட்டித்தீர்த்தது. இதன்காரணமாக படகு சவாரி ரத்து செய்யப்பட்டது. இருப்பினும் மாலை நேரத்தில் காற்று மற்றும் மழை குறைந்ததால் மீண்டும் படகு சவாரி தொடங்கியது.