பழுதடைந்த சாலையை சீரமைக்கக்கோரி நாற்றுநடும் போராட்டம் நடத்திய பொதுமக்கள்
திருப்பூரில் சாலையை சீரமைக்கக்கோரி சாலையின் நடுவே நாற்று நட்டு இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சமரச பேச்சுவார்த்தை நடத்த வந்த அதிகாரிகளை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வீரபாண்டி,
திருப்பூர் வீரபாண்டி 54-வது வார்டு பகுதிக்கு உட்பட்ட கல்லாங்காடு, கிருஷ்ணாநகர், ஜே.ஜே.நகர் ஆகிய பகுதிகளில் தார் சாலைகள் மிகவும் பழுதடைந்து அடிப்படை வசதிகள் இன்றியும், மழைநீர் சாலையில் தேங்கியும் காணப்படுகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு சாலையை கடக்க வேண்டியுள்ளது. இதனை கண்டித்து நேற்று வீரபாண்டி பகுதி இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் 4-ம் மண்டல பொறுப்பாளர் அருணாச்சலம் தலைமையில் பொதுமக்கள் சாலையின் நடுவே நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது சாலையின் நடுவில் தேங்கி கிடந்த கழிவுநீரில் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் மற்றும் பெண்கள் இறங்கி நாற்று நட்டு கோஷங்கள் எழுப்பி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். போராட்டத்தில் 4-ம் மண்டல செயலாளர் வடிவேலு மற்றும் கண்ணன், ஆரோக்கியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முற்றுகை
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வீரபாண்டி போலீசார் அவர்களிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். ஆனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வர வேண்டும் இல்லை என்றால் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று பொதுமக்கள் தெரிவித்தனர். இதனைதொடர்ந்து 4-ம் மண்டல அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகளை சூழ்ந்துகொண்டு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதனைத்தொடர்ந்து விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்த பிறகு போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.