விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக தஞ்சையில் அனைத்து போக்குவரத்து தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்

விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக தஞ்சையில் அனைத்து போக்குவரத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இன்று நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்திலும் பங்கேற்க முடிவு செய்துள்ளனர்.

Update: 2020-12-08 01:45 GMT
தஞ்சாவூர்,

புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் வரை தொடர்ந்து போராடுவோம் என்று டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், இன்று (செவ்வாய்க்கிழமை) நாடு முழுவதும் நடைபெறும் முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்து அனைத்து போக்குவரத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு தொ.மு.ச. பொதுச்செயலாளர் பாண்டியன் தலைமை தாங்கினார். ஏ.ஐ.டி.யூ.சி. மாநிலசெயலாளர் சந்திரகுமார், மாவட்ட தலைவர் சேவையா, போக்குவரத்து சங்க மாநில துணைத்தலைவர் துரை.மதிவாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கோஷங்கள் எழுப்பினர்

ஆர்ப்பாட்டத்தில் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் கஸ்தூரி, கோபிநாதன், சி.ஐ.டி.யூ. சங்க மாநில செயலாளர் ஜெயபால், பொதுச்செயலாளர் மணிமாறன், கவுரவ தலைவர் மனோகரன், விரைவு போக்குவரத்துக்கழக சங்க கிளை செயலாளர் செங்குட்டுவன், ஐ.என்.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் மோகன்ராஜ், பொருளாளர் சரவணன், விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் கண்ணன், ஓய்வு பெற்றோர் சங்க நிர்வாகிகள் அப்பாதுரை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் தொ.மு.ச. துணை பொதுச்செயலாளர் ஜெயச்சந்திரன் நன்றி கூறினார்.

மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர் இன்று நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்திலும் பங்கேற்க முடிவு செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்