திருமருகல் அருகே கனமழைக்கு வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பெண் பலி
திருமருகல் அருகே கனமழைக்கு வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பெண் பலியானார். அவரது கணவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
திட்டச்சேரி,
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருச்செங்காட்டாங்குடி தெற்கு ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். விவசாய கூலி தொழிலாளியான இவரது மனைவி மாலா(வயது 46). சம்பவத்தன்று இரவு பெய்த கனமழையின் காரணமாக இவரது வீட்டின் அருகே உள்ள ரவிச்சந்திரன் என்பவரது ஓட்டு வீட்டின் சுவர், பன்னீர்செல்வத்தின் வீட்டில் விழுந்தது.
இதில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மாலா மற்றும் அவரது கணவர் பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் சுவர்களுக்கு இடையில் சிக்கி கொண்டனர். தங்களை காப்பாற்றுமாறு இருவரும் சத்தம் போட்டனர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் அங்கு வந்து இருவரையும் மீட்டனர். இவர்களில் மாலா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
கணவர் படுகாயம்
படுகாயம் அடைந்த பன்னீர்செல்வத்தை சிகிச்சைக்காக நாகப்பட்டினம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இதுகுறித்து தகவல் அறிந்த திருக்கண்ணபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பலியான மாலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பலியான மாலாவிற்கு பிரபு(28), பிரவீன்(25), ஆகிய மகன்களும், பிரவீனா(26) என்ற மகளும் உள்ளனர். இவர்கள் அனைவரும் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர்.