சுரண்டை அருகே வீட்டில் உடல் கருகிய நிலையில் பிணமாக கிடந்த மூதாட்டி; போலீசார் விசாரணை

சுரண்டை அருகே வீட்டில் உடல் கருகிய நிலையில் மூதாட்டி பிணமாக கிடந்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2020-12-08 01:10 GMT
உடல் கருகிய நிலையில் பிணம்
சுரண்டை அருகே உள்ள சாம்பவர்வடகரை சாலை விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் வேலு. இவரது மனைவி முத்துலட்சுமி (வயது 75). இவர்களுக்கு பத்திரகாளி, மாரியப்பன், பாலகிருஷ்ணன் ஆகிய மகன்களும் இசக்கியம்மாள், முத்து ஆகிய மகள்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி குடும்பத்துடன் தனித்தனியாக வசித்து வருகின்றனர். முத்துலட்சுமி தனியாக வசித்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று காலை குடிநீர் குழாயில் தண்ணீர் வந்துள்ளது. அதனை பிடிக்க வருமாறு பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் கூப்பிட்டும் முத்துலட்சுமி சத்தம் கொடுக்கவில்லை. வீட்டுக்கதவும் 

பூட்டப்பட்டு இருந்தது. இதை தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் சேர்ந்து கதவை உடைத்து பார்த்தபோது, அங்கு உடல் கருகிய நிலையில் மர்மமான முறையில் முத்துலட்சுமி பிணமாக கிடந்துள்ளார்.

போலீசார் விசாரணை
அவரது உடல் அருகில் மண்எண்ணெய் விளக்கு பாட்டில் மற்றும் தீப்பெட்டி இருந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த சாம்பவர்வடகரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வி விரைந்து வந்து விசாரணை நடத்தினார். ஏற்கனவே பலத்த மழை பெய்து அடிக்கடி மின்சாரம் தடைபட்டதால், மண்எண்ணெய் விளக்கை பற்ற வைக்கும் போது தீயில் கருகி இறந்தாரா? அல்லது மின்சாரம் தாக்கியதால் இறந்தாரா? 

என போலீசார் பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்