புனித அமல அன்னை ஆலயத்தில் தேர்த்திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கியது
புனித அமல அன்னை ஆலய தேர்த்திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.
ஈரோடு,
ஈரோடு ஸ்டேட் வங்கி ரோட்டில் புனித அமல அன்னை ஆலயம் உள்ளது. சுமார் 140 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயத்தின் தேர்த்திருவிழா ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு திருவிழா நேற்று கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு புனித அமல அன்னை ஆலய பங்குத்தந்தையும், ஈரோடு மறை வட்ட முதன்மை குருவுமான ஜான் சேவியர் தலைமையில் திருப்பலி (பூஜை) நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து அன்னை மரியாள் (மாதா) திருஉருவம் பதித்த கொடி ஏற்றப்பட்டது. விழாவில் உதவி பங்குத்தந்தை லாரன்ஸ் மற்றும் மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
விழாவில் தமிழக அரசின் வழிகாட்டுதலின் படி சமூக இடைவெளி, முகக்கவசம் பயன்படுத்தப்பட்டு பக்தர்கள் விழாவில் பங்கேற்றனர். தொடர்ந்து இன்று (திங்கட்கிழமை) முதல் சனிக்கிழமை வரை தினசரி காலையில் திருப்பலிகள் நடைபெறும். திங்கட்கிழமை மற்றும் வியாழக்கிழமை தவிர அனைத்து நாட்களும் மாலையில் சிறப்பு திருப்பலிகள் மற்றும் பிரார்த்தனைகள் நடக்கின்றன.
வேண்டுதல் தேர்
வருகிற 13-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தேர்த்திருவிழா கொண்டாடப்படுகிறது. வழக்கமாக அலங்கரிக்கப்பட்ட தேரில் மாதா சொரூபம் வைக்கப்பட்டு பன்னீர்செல்வம் பூங்கா, மணிக்கூண்டு, நேதாஜி ரோடு வழியாக ஊர்வலமாக எடுத்து வரப்படும்.
தற்போது கொரோனா பரவல் இருப்பதால், 13-ந் தேதி வேண்டுதல் தேர் எடுக்கப்படும். இந்த தேர் ஆலயத்தை சுற்றி எடுக்கப்படும். தேரின் பின்னால் பக்தர்கள் ஊர்வலமாக செல்ல அனுமதி இல்லை. எனவே வருகிற 13-ந் தேதி தேர்த்திருவிழாவையொட்டி காலை 6 மணி, காலை 8 மணி, காலை 10.30 மணி மற்றும் மாலை 5.30 மணி என 4 திருப்பலிகள் நிறைவேற்றப்பட உள்ளன. இந்த 4 திருப்பலிகளின் முடிவிலும் வேண்டுதல் தேர் எடுக்கப்படும்.
மேற்கண்ட தகவலை பங்குத்தந்தை ஜான் சேவியர், உதவி பங்குத்தந்தை லாரன்ஸ் ஆகியோர் தெரிவித்தனர்.