கம்பத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு கம்பம் பழைய தபால்நிலையம் முன்பு எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கம்பம்,
பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு கம்பம் பழைய தபால்நிலையம் முன்பு எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் அபுபக்கர்சித்திக் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் பாபர் மசூதி நிலத்தை முஸ்லிம்களிடம் திருப்பி கொடுக்க வேண்டும், பாபர் மசூதியை இடித்தவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும், வழிபாட்டு தலங்கள் சட்டம் 1991-யை நடைமுறைபடுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர், விடுதலை சிறுத்தைகள், தமிழ்புலிகள் அமைப்பினர், மே 17 இயக்கத்தினர் மற்றும் முஸ்லிம்கள் திரளாக கலந்து கொண்டனர்.