அமராவதி அணை நிரம்பியதால் 7 மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றம்
அமராவதி அணை நிரம்பியதால் 7 மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றப்படுகிறது.
தளி,
உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமராவதி அணை உள்ளது. அணைக்கு மழைக்காலங்களில் வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகள் மூலமாக நீர்வரத்து ஏற்படுகிறது. அதைத்தொடர்ந்து அமராவதி ஆறு மற்றும் பிரதான கால்வாய் மூலமாக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
அதை ஆதாரமாக கொண்டு கரும்பு, தென்னை, வாழை, நெல் மற்றும் காய்கறிகளை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.
பலத்த மழை
இந்த சூழலில் கடந்த 4 நாட்களாக மூணார், காந்தளூர், மறையூர் உள்ளிட்ட அமராவதி அணையின் நீர் ஆதாரங்களில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வந்தது.
அதைத்தொடர்ந்து நேற்று இரவு 7 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 89.51 அடியாக இருந்தது. (மொத்த கொள்ளளவு 90 அடி). அணைக்கு வினாடிக்கு 2313 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி அணையில் உள்ள 9 கண் மதகுகளில் 7 மதகுகள் வழியாக வினாடிக்கு 2300 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதனால் கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அணையில் உபரி நீர் திறந்து விடப்பட்டதை பார்க்க சுற்றுப்புற கிராமங்களில் உள்ள பொதுமக்கள் வாகனங்கள் மூலமாக அணைப்பகுதிக்கு வந்தனர். பின்னர் உபரி நீர் வெளியேறுவதை புகைப்படம் எடுத்ததுடன் மதகுகள் முன்பாக பாலத்தில் நின்று செல்பியும் எடுத்து மகிழ்ந்தனர்.
மேலும் தொடர்ந்து வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. கன மழை பெய்வதற்கான சூழல் நிலவியது. அணைக்கு நீர்வரத்தை உதவி பொறியாளர் பாபு சபரீஸ்வரன் தலைமையிலான பொதுப்பணித்துறையினர் கண்காணித்து வருகின்றனர். மேலும் நீர்வரத்து அதிகரித்தால் அணையில் உள்ள 9 கண் மதகுகள் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகின்ற ஷட்டர்கள் மற்றும் பிரதான கால்வாயில் கூடுதலாக தண்ணீர் திறப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பஞ்சலிங்க அருவி
மேலும் பலத்த மழை காரணமாக திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் தொடர்ந்து நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தின் சீற்றம் தணிந்தாலும் தண்ணீர் மும்மூர்த்திகள் எழுந்தருளியுள்ள குன்றை தழுவியவாறு திருமூர்த்தி அணையை அடைந்த வண்ணம் உள்ளது.