லால்குடி, முசிறி, திருவெறும்பூர், துறையூரில் தொடர் மழையால் 31 வீடுகள் சேதம்
லால்குடி, முசிறி, திருவெறும்பூர், துறையூரில் தொடர் மழையால் 31 வீடுகள் சேதம் அடைந்தன.
லால்குடி,
திருச்சி மாவட்டத்தில் புரெவி புயல் காரணமாக கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்தது. இதன்காரணமாக பல இடங்களில் பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்தன. லால்குடி அருகே நன்னிமங்கலம் பழைய தெருவைச் சேர்ந்த நருவுளி மகன் பழனிச்சாமி. விவசாயியான இவரது வீட்டின் மண்சுவர் நேற்று அதிகாலை இடிந்து விழுந்தது.
வீட்டின் வெளிப்புற பக்கத்தில் விழுந்த காரணத்தால் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதில் வீட்டிலுள்ள சமையல் பாத்திரங்கள் மட்டும் நசுங்கி சேதமடைந்தன. லால்குடி தாசில்தார் சித்ரா உத்தரவின்பேரில் வருவாய் ஆய்வாளர் மாறன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
முசிறி
இதுபோல் முசிறி அருகே புயல் மழைக்கு 5 வீடுகளின் சுவர்கள் இடிந்து சேதம் சேதமடைந்துள்ளது. முசிறி அருகே ஆமூர் பிர்காவிற்கு உட்பட்ட பெரிய கொடுங்குறை கிராமத்தில் பெரியசாமி, காமாட்சி, ராஜாமணி, திண்ணக்கோணம் பகுதியை சேர்ந்த சவுண்டம்மாள், சுந்தரராசு ஆகியோரது கூரை மற்றும் ஓட்டு வீடுகளின் மண் சுவர்கள் இடிந்து விழுந்து சேதமடைந்தன. இதுகுறித்து வருவாய்த்துறையினர் நேரில் சென்று பார்வையிட்டு முசிறி தாசில்தாருக்கு அறிக்கை வழங்கினர். இதையடுத்து முசிறி தாசில்தார் சந்திரதேவநாதன் உத்தரவின் பேரில் புயல் மழையால் வீடுகள் சேதம் அடைந்த 5 பேரின் குடும்பத்தினருக்கு இலவச வேட்டி, சேலை, அரிசி, மண்எண்ணெய் மற்றும் நிவாரண உதவிகளையும் வழங்கினர்.
திருவெறும்பூர், துறையூர்
மேலும் மழையின் காரணமாக திருவெறும்பூர் அருகே உள்ள வாழவந்தான் கோட்டையை சேர்ந்த கருணாநிதி, கீழக்குறிச்சியை சேர்ந்த அந்தோணியம்மாள், விசுவகுடியை சேர்ந்த பிச்சை, சோழமாதேவியை சேர்ந்த விஜயலட்சுமி உள்பட திருவெறும்பூர் பகுதியில் 10-க்கும் மேற்பட்டோரின் வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்தன. அவற்றை கிராம நிர்வாக அலுவலர்கள் பார்வையிட்டு கணக்கெடுத்து வருகின்றனர்.
துறையூர் வெங்கடேசபுரம் ஊராட்சியில் குறிஞ்சி தெரு புதிய காலனியில் 20 தொகுப்பு வீடுகள் உள்ளன. இந்தநிலையில் கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக 15 வீடுகள் மேற்கூரையில் விரிசல் ஏற்படும், மேற்கூரையில் சிமெண்டு காரை இடிந்து கீழே விழுந்தும் சேதம் அடைந்தன. இதனால் அந்த வீடுகளில் வசித்து வரும் கிராம மக்கள் இரவு நேரங்களில் அஞ்சி அஞ்சி உறங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.