பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு கரூரில் முக்கிய இடங்களில் போலீசார் தீவிர சோதனை
பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு கரூரில் முக்கிய இடங்களில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
கரூர்,
உத்தரப்பிரதேசத்தில் கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ந் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று இடிப்பு தினத்தை முன்னிட்டு அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் கரூர் பஸ் நிலையம், ரெயில் நிலையம், முக்கிய கோவில்களில் போலீசார் நிறுத்தப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
கரூர் ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையிலான ரெயில்வே போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
பரபரப்பு
மேலும் வெடிகுண்டு கண்டறியும் கருவி மூலம் சோதனை செய்ததுடன் காலை ஜனசதாப்தி விரைவு ரெயிலில் இருந்து இறங்கி வந்த பயணிகள் மற்றும் ரெயில் நிலையம் வந்த பயணிகள் ஆகியோர் வைத்திருந்த பேக் உள்ளிட்ட பைகளை தீவிர சோதனை செய்த பிறகே போலீசார் அவர்களை அனுப்பி வைத்தனர்.
இதனால் நேற்று கரூர் ரெயில் நிலையம் சற்று பரபரப்பாக காணப்பட்டது.