வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி கறம்பக்குடியில் விவசாயிகள் சாலை மறியல்

வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி கறம்பக்குடியில் விவசாயிகள் சாலை மறியல் 80 பேர் கைது.

Update: 2020-12-06 23:57 GMT
கறம்பக்குடி,

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரியும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் கம்யூனிஸ்டு கட்சிகளின் விவசாய சங்கத்தின் சார்பில் கறம்பக்குடி சீனி கடைமுக்கத்தில் சாலை மறியல் நடைபெற்றது. இதில் விவசாயிகள் திரளானோர் கலந்துகொண்டு விவசாய சட்டத்திற்கு எதிராக கோஷம் எழுப்பினர். இதில்கலந்துகொண்ட மாவட்ட விவசாய சங்கத் தலைவர் பொன்னுசாமி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த செங்கோடன், மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு விஜயன் உள்பட 80 பேரை கறம்பக்குடி போலீசார் கைது செய்தனர்.

மறியல் போராட்டத்தின்போது பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் உருவபொம்மையை விவசாயிகள் எரிக்க போவதாக தகவல் பரவியது. இதனால், புதுக்கோட்டை மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரெண்டு ரெஜினா பேகம் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். ஆனால் விவசாயிகள் மறியலில் மட்டும் ஈடுபட்டு கைதாகினர். இதனால் போலீசார் நிம்மதி அடைந்தனர். விவசாயிகளின் மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்