டெல்லி விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு: நாகர்கோவிலில் கம்யூனிஸ்டு கட்சிகள் மறியல்; போலீசாருடன் தள்ளுமுள்ளு
டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக நாகர்கோவிலில் கம்யூனிஸ்டு கட்சிகள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக 188 பேரை போலீசார் கைது செய்தனர்.;
நாகர்கோவில்,
டெல்லியில் விவசாயிகள் நடத்தும் போராட்டத்தை ஆதரித்து கம்யூனிஸ்டு கட்சிகள் சார்பில் நாகர்கோவிலில் நேற்று மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. முன்னதாக நாகர்கோவில் வடசேரி உழவர் சந்தை அருகில் இருந்து தலைமை தபால் நிலைய பகுதிக்கு புறப்பட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் செல்லசாமி தலைமை தாங்கினார்.
முன்னாள் எம்.பி. பெல்லார்மின், முன்னாள் எம்.எல்.ஏ. லீமாரோஸ், முன்னாள் நகரசபை தலைவர் டெல்பின், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அகமது உசேன், முருகேசன், தங்கமோகன், ஸ்டாலின்தாஸ், சேகர், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் இசக்கிமுத்து, நிர்வாகிகள் ஸ்ரீகுமார், ராஜு, மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கம்யூனிஸ்டு (விடுதலை) கட்சி மாவட்ட செயலாளர் அந்தோணிமுத்து, நிர்வாகிகள் சுசீலா, கார்மல், ரமேஷ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மறியல் போராட்டம்
அவர்கள் உழவர் சந்தை பகுதியில் இருந்து பாலமோர் ரோடு அருகே வரும்போது போலீசார் தடுப்புகள் அமைத்து அவர்களை தடுத்தனர். ஆனால் பலர் தடுப்புகளை கீழே தள்ளிவிட்டு தலைமை தபால் நிலையத்துக்குச் செல்ல முயன்றனர். இதனால் போலீசாருக்கும், இடதுசாரி கட்சியினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதில் பலர் தடுப்புகளைத் தாண்டி தலைமை தபால் நிலையத்துக்குச் சென்றனர்.
இதனால் போலீசார் அப்பகுதியில் உள்ள ஒரு சினிமா தியேட்டர் முன்பும், அண்ணா விளையாட்டரங்கம் முன்பும், தலைமை தபால் நிலைய சந்திப்பு பகுதியிலும் தடுப்புகளை ஏற்படுத்தினர். அவற்றையும் தாண்டி சிலர் தலைமை தபால் நிலையத்துக்கு சென்றனர். இதனால் மாவட்டச் செயலாளர் செல்லசுவாமி தலைமையில், முன்னாள் எம்.பி. பெல்லார்மின் உள்ளிட்டோர் அண்ணா விளையாட்டரங்கம் முன்பும், பலர் தலைமை தபால் நிலையம் முன்பும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
188 பேர் கைது
இதையடுத்து தடையை மீறி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டது, கொரோனா காலவிதிமுறைகளை மீறி கூட்டமாக கூடி போராட்டம் நடத்தியது உள்ளிட்ட பிரிவுகளில் போலீசார் அவர்களை கைது செய்தனர். மொத்தம் 188 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 41 பேர் பெண்கள் ஆவர். அவர்கள் அனைவரையும் போலீஸ் வாகனங்கள், அரசு பஸ் போன்ற வாகனங்களில் ஏற்றி வடசேரி பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். மாலையில் அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
போலீசார் 4 இடங்களில் தடுப்புகள் அமைத்து தடுத்தும், போராட்டக்காரர்கள் தடுப்புகளைத்தாண்டிச் சென்று மறியலில் ஈடுபட்டது நாகர்கோவிலில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.