வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி கடலூர், விருத்தாசலத்தில் தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update:2020-12-06 11:06 IST
கடலூர்,

மத்திய அரசு கொண்டு வந்த புதிய 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், மத்திய அரசை கண்டித்தும் தி.மு.க. சார்பில் 5-ந் தேதி (அதாவது நேற்று) மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் மஞ்சக்குப்பத்தில் நேற்று காலை தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். ரமேஷ் எம்.பி., துரை.கி.சரவணன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் இள.புகழேந்தி, அய்யப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் நகர செயலாளர் ராஜா, வி.ஆர். அறக்கட்டளை நிறுவனர் விஜயசுந்தரம் கூட்டுறவு சங்க தலைவர் ஆதிபெருமாள், நிலவள வங்கி தலைவர் ராமலிங்கம், ராஜா, வக்கீல் வினோத், சரத், முன்னாள் நகர மன்ற உறுப்பினர்கள் இளங்கோவன், வனிதாசேகர், மகளிரணி அஞ்சுகம், சாந்தி பழனிவேல், நகர மகளிரணி செயலாளர் விஜயா உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

விருத்தாசலம்

கடலூர் மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் விருத்தாசலம் பஸ் நிலையம் முன்பு கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் கணேசன் தலைமை தாங்கினார். சபா.ராஜேந்திரன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. முத்துக்குமார், மாநில செயற்குழு உறுப்பினர் வெங்கட்ராமன், ஒன்றிய செயலாளர்கள் வேல்முருகன், கனக.கோவிந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் தண்டபாணி வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் கம்மாபுரம் ஒன்றிய பொறுப்பாளர் முருகன், பண்ருட்டி ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட துணை செயலாளர் அரங்க.பாலகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் குரு சரஸ்வதி, மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் எம்.எஸ்.கணேஷ் குமார், நகர இளைஞரணி அமைப்பாளர் பொன்.கணேஷ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் தர்ம மணிவேல், நகர துணை செயலாளர் நம்பிராஜன், மாவட்ட பிரதிநிதி ஆட்டோ பாண்டியன், தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளர் ஆனந்தன், மாவட்ட மாணவரணி துணை செயலாளர் வக்கீல் அருள்குமார், வக்கீல் ரவிச்சந்திரன், வசந்தகுமார், வள்ளலார் குடில் இளையராஜா, கோவிந்தசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர துணை செயலாளர் ராமு நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்