வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி கொட்டும் மழையில் கருப்புக்கொடி ஏந்தி தி.மு.க.வினர் போராட்டம்

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி விழுப்புரத்தில் கொட்டும் மழையில் கருப்புக்கொடி ஏந்தி தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். செஞ்சியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2020-12-06 04:18 GMT
விழுப்புரம்,

விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், விவசாயிகளின் உரிமைகளை பாதுகாக்க வலியுறுத்தியும், டெல்லியில் போராடும் விவசாயிகளை ஆதரித்தும் நேற்று தமிழகம் முழுவதும் தி.மு.க.வினர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அந்த வகையில் விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் நேற்று காலை மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் நா.புகழேந்தி தலைமை தாங்கி கண்டன உரையாற்றினார். மாவட்ட அவைத்தலைவர் ஜெயச்சந்திரன், பொருளாளர் ஜனகராஜ், துணை செயலாளர்கள் புஷ்பராஜ், முருகன், மைதிலி ராஜேந்திரன், தலைமை தீர்மானக்குழு செயலாளர் சம்பத், மாநில மருத்துவ அணி இணை செயலாளர் டாக்டர் லட்சுமணன், மாநில விவசாய அணி துணை செயலாளர் அன்னியூர் சிவா, தலைமை செயற்குழு உறுப்பினர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கொட்டும் மழையில்...

ஆர்ப்பாட்டத்தின்போது விழுப்புரத்தில் சாரல் மழை பெய்தது. இருப்பினும் அதை பொருட்படுத்தாமல் தி.மு.க. வினர் கருப்பு சட்டை அணிந்தும், கருப்புக்கொடி ஏந்தியும் குடைபிடித்தபடி மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷம் எழுப்பினர். இதில் ஒன்றிய செயலாளர்கள் கல்பட்டு ராஜா, மும்மூர்த்தி, தெய்வசிகாமணி, தங்கம், வேம்பி ரவி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தினகரன், மாணவர் அணி அமைப்பாளர் ஸ்ரீவினோத், நகர துணை செயலாளர் புருஷோத்தமன், விவசாய அணி அமைப்பாளர்கள் பாஸ்கர், சீனுசெல்வரங்கம் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் விழுப்புரம் நகர செயலாளர் சக்கரை நன்றி கூறினார்.

செஞ்சி

விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் செஞ்சி கூட்டு ரோட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு வடக்கு மாவட்ட செயலாளர் செஞ்சி மஸ்தான் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். அப்போது அவர்கள் திடீரென அந்த பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். உடன் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்து, திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இதில், ஒன்றிய செயலாளர்கள் செஞ்சி (கிழக்கு) விஜயகுமார், விஜயராகவன், மேல்மலையனூர் நெடுஞ்செழியன், சுப்பிரமணி மாவட்ட வழக்கறிஞர் அணி மணிவண்ணன், செஞ்சி நகர செயலாளர் காஜா நஜீர், நிர்வாகிகள் குணசேகரன்,ராமசரவணன், கார்த்திக், பாஷா, பழனி, பெருங்கப்பூர் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திண்டிவனம்

திண்டிவனத்தில் வ.உ.சி. திடலில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் செஞ்சி மஸ்தான் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் டாக்டர் மாசிலாமணி, சீதாபதி சொக்கலிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சேதுநாதன், செந்தமிழ் செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில மருத்துவ அணி துணை செயலாளர் டாக்டர் சேகர், மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமணன், மாநில தீர்மானக்குழு உறுப்பினர் செஞ்சி சிவா, மாவட்ட வக்கீல் அணி அமைப்பாளர் ஆதித்தன், வக்கீல் அசோகன், நகர பொருளாளர் கண்ணன், மாவட்ட துணை செயலாளர் வசந்தா, ரவிக்குமார், ஒன்றிய செயலாளர் ராஜாராம், மரக்காணம் மேற்கு ஒன்றிய செயலாளர் பழனி உள்பட பலர் கலந்து கொண்டு, கருப்பு கொடி ஏந்தி மத்திய, மாநில அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.

மேலும் செய்திகள்