டெல்டா மாவட்டங்களில், தொடர் மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி முளைத்தன
டெல்டா மாவட்டங்களில் தொடர் மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதால் முளைத்து வருகின்றன. இளம் நெற்பயிர்கள் அழுகி வருவதால் விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர்.
தஞ்சாவூர்,
தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழும் தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும். தற்போது விவசாயிகள் சம்பா, தாளடி சாகுபடி பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். தற்போது வரை 3 லட்சத்து 37 ஆயிரம் ஏக்கர் சாகுபடி நடந்துள்ளது. அதாவது நிர்ணயிக்கப்பட்ட இலக்கை தாண்டி கூடுதலாக 20 ஆயிரம் ஏக்கர் வரை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
இதில் முன்பட்ட சம்பா தற்போது அறுவடைக்கு தயாரான நிலையில் உள்ளது. இந்த நிலையில் ‘புரெவி’ புயல் காரணமாக கடந்த 4 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் இந்த நெற்பயிர்கள் சாய்ந்தன.
நெற்பயிர்கள் முளைத்தன-இளம் பயிர்கள் அழுகின
மேலும் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்களில் தண்ணீர் தேங்கி உள்ளதால் சாய்ந்த நெற்பயிர்கள் தற்போது முளைத்து வருகின்றன. சில இடங்களில் நெற்பயிர்கள் அழுகி காணப்படுகின்றன. தஞ்சையை அடுத்த சூரக்கோட்டை, மடிகை, வரவுக்கோட்டை, காட்டூர், துறையுண்டார்கோட்டை, ஒரத்தநாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாய்ந்த நெற்பயிர்கள் முளைத்து காணப்படுகின்றன. மேலும் பல இடங்களில் கதிர்கள் வரும் நிலையில் இருந்த நெற்பயிர்கள் சாய்ந்தால் அது பதராகும் நிலை உள்ளது. இது தவிர இளம் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி காணப்படுகின்றன. இதனால் பல இடங்களில் இளம் நெற்பயிர்கள் அழுகி வருகின்றன.
தஞ்சை மாவட்டத்தில் இதுவரை 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி காணப்படுகின்றன. ஒரு சில பகுதிகளில் தண்ணீர் வடிந்தாலும், சில இடங்களில் தண்ணீர் வடிவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இது தவிர பொங்கல் கரும்பு, மக்காச்சோளம், நிலக்கடலை உள்ளிட்ட பயிர்களும் மழையால் சேதம் அடைந்துள்ளன. திருவாரூர் மாவட்டத்தில் கன மழையினால் 1 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் சம்பா, தாளடி பயிர்கள் நீரில் முழ்கியுள்ளது. இதில் முன்பட்ட சம்பா சாகுபடி செய்யப்பட்டு அறுவடைக்கு தயாரான 123 ஏக்கர் நெற் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளது.
திருவாரூர் மாவட்டம்
திருவாரூர் மாவட்டத்தில் 3 லட்சத்து 70 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா, தாளடி சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதில் 1 லட்சத்து 35 ஆயிரம் 550 ஏக்கர் பரப்பில் நடவும், 1 லட்சத்து 38 ஆயிரத்து 728 ஏக்கர் பரப்பில் நேரடி விதைப்பும் என 2 லட்சத்து 74 ஆயிரத்து 278 ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி நடந்துள்ளது. 96 ஆயிரத்து 912 ஏக்கர் பரப்பளவில் நடவு முறையில் தாளடி சாகுபடியும் என மொத்தம் 3 லட்சத்து 71 ஆயித்து 190 ஏக்கர் பரப்பளவில் இலக்கை தாண்டி சம்பா, தாளடி சாகுபடி நடந்துள்ளது.தற்போது பெய்து வரும் கனமழையினால் 1 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் சம்பா, தாளடி பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளது. இதில் முன்பட்ட சம்பா சாகுபடி செய்யப்பட்டு அறுவடைக்கு தயாரான 125 ஏக்கர் நெற் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளது குறிப்பிடதக்கது.
நாகை மாவட்டம்
நாகை மாவட்டத்தில் இந்த ஆண்டு 3 லட்சத்து 25 ஆயிரம் ஏக்கரில் சம்பா, தாளடி நெல் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி சம்பா 2 லட்சத்து 17 ஆயிரத்து 19 ஏக்கரும், தாளடி 1 லட்சத்து 13 ஆயிரத்து 32 ஏக்கரும் என 3 லட்சத்து 30 ஆயிரத்து 51 ஏக்கரில் சம்பா, தாளடி நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. 5 ஆயிரத்து 051 ஏக்கர் இலக்கை மிஞ்சி அதிகமாக சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
சம்பா சாகுபடியை பொறுத்தவரை 80 முதல் 90 நாள் பயிராக வளர்ந்து நிற்கிறது. அதேபோல தாளடி 40 முதல் 50 நாட்கள் இளம் பயிராக வளர்ந்து உள்ளது. நாகை மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக இளம் பயிரான தாளடியும், தாழ்வான பகுதியில் உள்ள சம்பாவும் நீரில் மூழ்கியது.
மாவட்டத்தில் 75 ஆயிரத்து 840 ஏக்கரில் தாளடியும், 50 ஆயிரத்து 141 ஏக்கரில் சம்பாவும் என மொத்தம் 1 லட்சத்து 25 ஆயிரத்து 981 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கியுள்ளன. நாகை மாவட்டத்தை பொறுத்தவரை அறுவடைக்கு தயாரான நிலையில் நெற்பயிர்கள் ஏதும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
விவசாயிகள் கண்ணீர்
புரெவி புயலால் டெல்டா மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளிலும் நெற்பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. நடுத்தர வயதில் உள்ள பயிர்களுக்கு தற்போது பாதிப்புகள் இல்லை. இளம் நெற்பயிர்களும், அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்களும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் கண்ணீர் வடிக்கும் விவசாயிகள், வேளாண்மை அதிகாரிகள் உரிய முறையில் கணக்கெடுப்பு செய்து இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.