4-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி தஞ்சையில் ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி

தஞ்சையில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 4-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவருடைய சிலைக்கு மாலை அணிவித்து அ.தி.மு.க.வினர் அஞ்சலி செலுத்தினர்.

Update: 2020-12-06 03:41 GMT
தஞ்சாவூர்,

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 4-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அ.தி.மு.க.வினர் ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்தும், அவருடைய படத்துக்கு மலர்தூவியும் அஞ்சலி செலுத்தினர்.

அதன்படி தஞ்சை தெற்கு மாவட்டம், ஒன்றியம், தஞ்சை மாநகர பகுதி அ.தி.மு.க. சார்பில் தஞ்சை ரெயில் நிலையம் அருகே உள்ள ஜெயலலிதா சிலைக்கு முன்னாள் எம்.பி. பரசுராமன் தலைமையில் அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை.திருஞானம், பால்வள தலைவர் காந்தி, பகுதி செயலாளர்கள் அறிவுடைநம்பி, புண்ணியமூர்த்தி, சரவணன், ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கருப்பு சட்டை

அ.தி.மு.க.வினர் கருப்பு சட்டை அணிந்தும், கருப்பு பேட்ஜ் அணிந்து ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். அப்போது மழை பெய்ததால் குடைபிடித்துக்கொண்டு அஞ்சலிசெலுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் சாவித்திரிகோபால், மகளிரணி செயலாளர் அமுதாரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் துரை.வீரணன், சாமிவேல், நாகத்தி கலியமூர்த்தி, அமைப்புசாரா ஓட்டுனர் அணி செயலாளர் நாகராஜன், ஜெயலலிதா பேரவை மாவட்ட துணைத்தலைவர் பாலை.ரவி, முன்னாள் நகர செயலாளர் பண்டரிநாதன், முன்னாள் துணை மேயர் மணிகண்டன் மற்றும் முன்னாள் கவுன்சிலர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், அ.தி.மு.க.வினர் திரளாக கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்