கீழ்வேளூர் அருகே கழுத்து அறுக்கப்பட்டதில் காயமடைந்த ஆசிரியை சாவு கொலை வழக்கில் டிரைவர் கைது
கீழ்வேளூர் அருகே கழுத்து அறுக்கப்பட்டதில் காயமடைந்த ஆசிரியை பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக கொலை வழக்கில் டிரைவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
சிக்கல்,
நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே உள்ள நாங்குடி பகுதியை சேர்ந்தவர் தணிகாசலம். இவருடைய மனைவி பரமேஸ்வரி(வயது 45) . இவர், தேவூரில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். தேவூர் காந்தி நகரை சேர்ந்தவர் கண்ணன்(38). தனியார் பஸ் டிரைவரான இவருக்கும், பரமேஸ்வரிக்கும் தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
சம்பவத்தன்று பரமேஸ்வரி வீட்டுக்கு கண்ணன் சென்றார். அப்போது கண்ணனுக்கும், பரமேஸ்வரிக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டு இருவரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆத்திரமடைந்த கண்ணன், வீட்டில் கிடந்த அரிவாள்மனையை எடுத்து பரமேஸ்வரியின் கழுத்தை அறுத்ததாக கூறப்படுகிறது.
பரிதாப சாவு
இதில் ரத்த வெள்ளத்தில் துடி, துடித்த பரமேஸ்வரி வலியில் அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் சம்பவ இடத்துக்கு திரண்டு வந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த கண்ணன் வீட்டில் இருந்து தப்பி ஓடி விட்டார். பரமேஸ்வரியை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கிருந்து தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பரமேஸ்வரி சிகிச்சை பலனின்றி நேற்று மாலை பரிதாபமாக இறந்தார்.
கைது
இது குறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்ணனை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று அவர் தேவூர் அரசு மருத்துவமனை அருகே நிற்பதாக கிடைத்த தகவலின்பேரில் போலீசார் அங்கு சென்று கண்ணனை கைது செய்தனர். அவரிடம் கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.விசாரணையின்போது போலீசாரிடம் கண்ணன் கூறியதாக போலீசார் தெரிவித்ததாவது:-
பஸ்சில் ஏற்பட்ட பழக்கம்
நான்(கண்ணன்) தனியார் பஸ்சில் டிரைவராக வேலை பார்த்தபோது அந்த பஸ்சில் ஆசிரியை பரமேஸ்வரி வருவார். அப்போது எனக்கும், ஆசிரியை பரமேஸ்வரிக்கும் பழக்கம் ஏற்பட்டது. தற்போது கொரோனா காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளதால் என்னால் பரமேஸ்வரியை சந்திக்க முடியவில்லை. இதனால் நான் சம்பவத்தன்று பரமேஸ்வரி வீட்டுக்கு சென்றேன். அப்போது அவர் என்னை வீட்டை விட்டு வெளியே செல்லுமாறு கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த நான் அரிவாள்மனையால் பரமேஸ்வரியின் கழுத்தை அறுத்து விட்டு தப்பி ஓடி விட்டேன்.
இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.