அரவக்குறிச்சி வட்டாரத்தில் 652 எக்டேர் பரப்பில் செங்காந்தள் மலர் சாகுபடி

அரவக்குறிச்சி வட்டாரத்தில் 652 எக்டேர் பரப்பில் செங்காந்தள் மலர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதனை கம்பளி பூச்சியிடம் இருந்து பாதுகாக்க தோட்டக்கலை உதவி இயக்குனர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

Update: 2020-12-06 00:54 GMT
அரவக்குறிச்சி,

கண்வலிக்கிழங்கு என்று அழைக்கப்படும் செங்காந்தள் மலர் அரவக்குறிச்சி வட்டாரத்தில் 652 எக்டேர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த மலர் அதிக மருத்துவ குணங்கள் நிறைந்ததாகும். தற்போது, மழை பெய்து வருவதால் செங்காந்தள் மலர் கிழங்கினை அழுகல், பூ கருகலில் இருந்து பாதுகாக்க வடிகால் வசதிஏற்படுத்த வேண்டும்.

கம்பளி பூச்சி

இதன் இலையை கம்பளிப்பூச்சியிடம் இருந்து பாதுகாக்க 3 சதவீத வேப்ப எண்ணெய் தெளிக்கலாம். இலைகளில் ஆங்காங்கே இலைப்பேன் தென்பட்டால் ஸ்பினோசாட் என்னும் மருந்தை ஒரு எக்டேருக்கு 200 மி.லி. தெளித்து கட்டுப்படுத்தலாம். இலை கருகல் நோயினை கட்டுப்படுத்த புரோபிகோசனால் 0.1 சதவீதம் 15 நாட்கள் இடைவெளியில் தெளித்து கட்டுப்படுத்தலாம். இந்நோய் வராமல் தடுக்க கிழங்கினை நடும் முன் சூடோமோனாஸ் 0.2 சதவீதம் மி.லி. கரைசலில் விதை நேர்த்தி செய்து நடவேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்