அரசுத்துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்
பெரம்பலூரில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட பிரதிநிதித்துவ பேரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் இளங்கோவன் தலைமை தாங்கினார்.
பெரம்பலூர்,
பெரம்பலூரில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட பிரதிநிதித்துவ பேரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் இளங்கோவன் தலைமை தாங்கினார். கூட்டத்தை சங்கத்தின் அரியலூர் மாவட்ட தலைவர் பஞ்சாபகேசன் தொடங்கி வைத்து பேசினார். பெரம்பலூர் மாவட்ட பொருளாளர் குமரிஅனந்தன் வேலை அறிக்கை வாசித்தார். பொருளாளர் ராஜராஜன் வரவு-செலவு அறிக்கையை தாக்கல் செய்தார். தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தை சேர்ந்த செல்வகுமார் வாழ்த்தி பேசினார். மாநில துணை தலைவர் பெரியசாமி நிறைவுரையாற்றினார்.
நியாயமான கோரிக்கைகளுக்காக போராட்டத்தில் ஈடுபட்டதற்காக அரசு ஊழியர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தற்காலிக பணி நீக்கம், பணியிட மாறுதல், பதவி உயர்வு மறுப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை வழங்கிட வேண்டும். இளைஞர்களின் வேலை வாய்ப்பை பறிக்கும் அரசாணை எண் 56-ஐ ரத்து செய்திட வேண்டும். தமிழக அரசுத்துறைகளில் உள்ள 4½ லட்சம் காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும். நிறுத்தப்பட்ட அகவிலைப்படி, சரண்விடுப்பு ஒப்புவிப்பு திரும்ப வழங்கப்பட வேண்டும். நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக துணை தலைவர் சிவக்குமார் வரவேற்றார். முடிவில் தணிக்கையாளர் ராஜ்மோகன் நன்றி கூறினார்.