தேர்தலில் வெற்றி பெற பொறுப்பாளர்கள் ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும் - அ.தி.மு.க. ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் பேச்சு
தேர்தலில் வெற்றி பெற பொறுப்பாளர்கள் ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும் என அ.தி.மு..க. ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.
விருத்தாசலம்,
விருத்தாசலத்தில் கடலூர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதற்கு தலைமை கழக பேச்சாளர் முருகுமணி தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் விருத்தாசலம் கலைச்செல்வன், திட்டக்குடி முருகுமாறன், மாவட்ட பேரவை செயலாளர் ரவிச்சந்திரன், முன்னாள் நகர்மன்ற தலைவர் அருள் அழகன், மாவட்ட பாசறை செயலாளர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொருளாளர் ராமு வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக கடலூர் மாவட்ட தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள சட்டத்துறை மற்றும் கனிம வளத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியதாவது:-
அ.தி.மு.க. தொண்டர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் தேர்தலை எதிர் கொண்டால் நம்மை வெற்றி பெற எவராலும் முடியாது. அ.தி.மு.க. என்றால் மக்கள் முகம் சுளிக்கமாட்டார்கள்.
ஆனால் தி.மு.க. என்றால் மக்கள் முகம் சுளிப்பார்கள். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் நிர்வாக திறமையால் ஆட்சி சிறப்பாக இருப்பதாக எல்லோரும் கூறுகிறார்கள். நமது இயக்கத்தில் உண்மையான, விசுவாசமான தொண்டன் இருக்கும் வரை மு.க.ஸ்டாலின் அல்ல, 100 கருணாநிதி வந்தாலும் நமது இயக்கத்தை ஒன்றும் செய்ய முடியாது. நமது இயக்கத்தில் சாதாரண கிளை செயலாளர் கூட தமிழக முதல்-அமைச்சராக முடியும். ஆனால் தி.மு.க.வில் அது முடியாது.. நமது இயக்கத்தில் இளைஞர்களின் உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். நிர்வாகிகள் இளைஞர்களை ஊக்கப்படுத்தி வழிநடத்த வேண்டும்.
எனக்கு பிறகும் நூறு ஆண்டுகள் ஆனாலும் அ.திமு..க. நிலைத்திருக்கும் என்ற மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் வார்த்தையை நாம் உண்மையாக்க வேண்டும்.
தேர்தலில் வெற்றி பெற அனைத்து பொறுப்பாளர்களும் ஒற்றுமையுடன் பணிகளை மேற்கொள்ள வேண்டும். தொண்டர்கள் அனைவரும் போராடி கடலூர் மேற்கு மற்றும் கிழக்கு மாவட்டங்களில் உள்ள அனைத்து தொகுதிகளையும் வென்றெடுக்க பாடுபடவேண்டும். இவ்வாறு அமைச்சர் சி.வி.சண்முகம் பேசினார்.
இதில் ஒன்றிய செயலாளர்கள் கம்மாபுரம் தெற்கு ஒன்றியம் முனுசாமி, வடக்கு ஒன்றியம் சின்ன ரகுராமன், விருத்தாசலம் வடக்கு ஒன்றியம் பாலதண்டாயுதம், தெற்கு ஒன்றியம் தம்பிதுரை, நல்லூர் வடக்கு ஒன்றியம் பச்சமுத்து, தெற்கு ஒன்றியம் ராஜேந்திரன், மேற்கு ஒன்றியம் முத்துப்பிள்ளை, மங்கலம்பேட்டை பேரூர் செயலாளர் ஜமால் முகமது, ஒன்றியக்குழு தலைவர்கள் விருத்தாசலம் செல்லத்துரை, கம்மாபுரம் மேனகா விஜயகுமார், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் விஜயகுமார், மாவட்ட பாசறை தலைவர் வக்கீல் அருண், கம்மாபுரம் ஜெயலலிதா பேரவை ஒன்றிய பொருளாளர் ரெங்கசாமி, முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் பாஸ்கர், முன்னாள் ஒன்றியக்குழு துணை தலைவர் கனகசிகாமணி, விருத்தாசலம் வடக்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ரமேஷ், விருத்தசலம் வடக்கு ஒன்றிய பாசறை செயலாளர் தங்கதுரை, கோமங்கலம் வெங்கடேசன், பெரம்பலூர் சிகாமணி மற்றும் விருத்தாசலம், திட்டக்குடி, புவனகிரி தொகுதி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் விருத்தாசலம் நகர செயலாளர் சந்திரகுமார் நன்றி கூறினார்.