சீர்காழி பகுதியில் தொடர் மழை: குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்தது நெற்பயிர்கள் மூழ்கும் அபாயம்
சீர்காழி பகுதியில் தொடர்ந்து பெய்த கனமழையால் குடியிருப்பு பகுதிகளை தண்ணீர் சூழ்ந்தது. மேலும் நெய்பயிர்கள் மூழ்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
சீர்காழி,
சீர்காழி பகுதியில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், ஈசானிய தெரு, ரெயில்வே ரோடு, வ.உ.சி. கிழக்குத்தெரு, வைத்தீஸ்வரன்கோவில் கீழவீதி, பட்டவர்த்தி சாலை, கீழத்தெரு உள்ளிட்ட முக்கிய சாலைகளில் மழை நீர் வடிய முடியாமல் தேங்கி உள்ளது. மேலும் மழை நீரோடு கழிவுநீர் கலப்பதால் சாலைகளில் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.
இதேபோல் சீர்காழி நகர் பகுதியில் பாலாஜி நகர், மாரிமுத்து நகர், ஈசானிய தெரு, அகர திருக்கோலக்கா தெரு, சுபஸ்ரீ கார்டன் நகர், கற்பகம் நகர், வேலவன் நகர், சன் சிட்டி நகர் ஆகிய குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் வடிய வழியின்றி தண்ணீர் சூழ்ந்து உள்ளது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதற்கு மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். பல்வேறு சாலைகளில் மழைநீர் தேங்கி உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கும் அபாயம்
இதேபோல் தாழ்வான பகுதிகளில் சம்பா சாகுபடி செய்யப்பட்ட விளை நிலங்களில் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கும் அபாய நிலையில் உள்ளது. மேலும் தொடர்ந்து மழை பெய்தால் சம்பா நெற்பயிர்கள் வீணாகி விடும் என்பதால் விவசாயிகள் மிகுந்த கவலையில் உள்ளனர். பல்வேறு ஊராட்சிகளில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றும் பணியில் ஊராட்சி மன்ற தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். சீர்காழி பகுதியில் அதிக அளவு மழை பெய்ததால் மக்களின் நடமாட்டம் குறைந்தது. இதனால் குறைவான பஸ்களே இயக்கப்பட்டன.
திருக்கடையூர்
புரெவி புயல் காரணமாக திருக்கடையூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று பலத்த மழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களிலும், வயல்களிலும் தண்ணீர் தேங்கி நின்றது. பிள்ளைபெருமாநல்லூர், டி.மணல்மேடு, கிள்ளியூர், மடப்புரம், காலமநல்லூர், மருதம்பள்ளம், மாமாகுடி, மாத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக பலத்த மழை பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
கொள்ளிடம்
கொள்ளிடம் பகுதியில் சில நாட்களாக தொடர்ந்து இரவு, பகலாக மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் கடற்கரை பகுதியில் மழை நீர் தேங்கி உள்ளது. நிவர் புயல் உருவாகி இருந்த போது பெய்த மழையால் பக்கிங்ஹாம் கால்வாயில் 5 இடங்களில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் பழையாறு சுனாமி குடியிருப்பு பகுதிகளில் தேங்கியிருந்த மழைநீரை வெளியேற்றுவதற்காக கரைகள் உடைக்கப்பட்டன. அப்போது கரைகளை சரியாக மணல் மூட்டைகளை கொண்டு மூடவில்லை. இதனால் தற்போது பெய்து வரும் தொடர் மழையால் சுனாமி குடியிருப்பில் உள்ள 800 வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்தது. இதனால் அப்பகுதியில் வசித்த மக்கள் தங்கள் உறவினர் வீட்டிற்கு சென்று விட்டனர்.
விவசாயிகள் கவலை
இதுகுறித்து தகவலறிந்த கொள்ளிடம் ஒன்றிய குழு தலைவர் ஜெயபிரகாஷ் சம்பவ இடத்திற்கு வந்து பொக்லின் எந்திரம் மூலம் தண்ணீர் வடிய நடவடிக்கை எடுத்தார். மேலும் தாண்டவன்குளம் ஊராட்சியில் கோட்டைமேடு சுனாமி குடியிருப்பு, மற்றும் சித்தி விநாயகபுரம், வா.உ.சி. நகர் மற்றும் தர்காஸ் கிராமத்தில் உள்ள வீடுகள் என மொத்தம் 700 வீடுகளை கடல் நீர் மற்றும் மழைநீர் சூழ்ந்து காணப்படுகிறது. இப்பகுதியில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் தண்ணீர் வடிய வைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். தொடர் மழையால் தற்காஸ் பகுதியில் சம்பா சாகுபடி செய்யப்பட்டிருந்த 20 ஏக்கர் விளைநிலங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளது. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.