புதுக்கோட்டையில், கடன் தொகையை திருப்பி தராதவரை காரில் கடத்தி மிரட்டல் - 2 பேர் கைது

புதுக்கோட்டையில் கடன் தொகையை திருப்பி தராதவரை காரில் கடத்தி சென்று மிரட்டல் விடுத்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2020-11-27 22:15 GMT
புதுக்கோட்டை,

புதுக்கோட்டையை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 27). இவர் திருப்பூரில் வேலைபார்த்து வந்த போது, புதுக்கோட்டை மாவட்டம், வாராப்பூரை சேர்ந்த நாகராஜ் (வயது 40) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு நாகராஜிடம் அய்யப்பன் ரூ.75 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார்.

அதனை அவர் திருப்பி செலுத்தாமல் இருந்திருக்கிறார். இந்த நிலையில் அய்யப்பனையும், அவரது உறவினரான சிவக்குமாரையும், நாகராஜ் மற்றும் அவரது உறவினர் பாலசுப்பிரமணியன் (34) ஆகியோர் புதுக்கோட்டையில் இருந்து காரில் கடத்தி சென்று ஒரு வீட்டில் அடைத்து வைத்துள்ளனர். மேலும் அய்யப்பனிடம் கடன் தொகையை கேட்டு மிரட்டியுள்ளனர்.

இது தொடர்பான தகவல் அறிந்த சிவக்குமாரின் மனைவி விஜயலட்சுமி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் அய்யப்பன், சிவக்குமார் ஆகியோரை மீட்டனர். கடத்தி சென்ற நாகராஜ், பாலசுப்பிரமணியன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்