அரியலூரில் புதிதாக 10 பேருக்கு கொரோனா - பெரம்பலூரில் ஒருவருக்கு தொற்று
அரியலூரில் நேற்று புதிதாக 10 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். பெரம்பலூரில் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டது.;
பெரம்பலூர்,
அரியலூர் மாவட்டத்தில் நேற்று அரியலூர், தா.பழூர், ஆண்டிமடம், ஜெயங்கொண்டம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் தலா ஒருவருக்கும், திருமானூர், செந்துறை பகுதிகளில் வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்களில் தலா 2 பேர் உள்பட மொத்தம் 10 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியுள்ளார். இதனால் அரியலூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,554 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் மொத்தம் 4,416 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.
மாவட்டத்தில் 48 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். தற்போதைய நிலவரப்படி பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனாவிற்கு 90 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 496 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இதனால் மாவட்டத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,235 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகளில் சிகிச்சை முடிந்து 2,211 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதுவரை 21 பேர் கொரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர்.
தற்போது மாவட்டத்தில் 3 பேர் மட்டுமே மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 378 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளது.