ரெயில் முன் பாய்ந்து பீகாரை சேர்ந்த தொழிலாளி தற்கொலை

செந்துறை அருகே ரெயில் முன் பாய்ந்து பீகாரை சேர்ந்த தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2020-11-27 21:45 GMT
செந்துறை, 

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள தளவாய் பகுதியில் இயங்கி வரும் தனியார் சிமெண்டு ஆலையில் பீகார் மாநிலத்தை சேர்ந்த அனோகிலால்ஷா(வயது 40) என்பவர் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். தீபாவளிக்கு பீகார் சென்றுவிட்டு இங்கு வந்த அவர், செல்போனில் தனது மனைவியுடன் பேசியுள்ளார். 

அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த அனோகி லால்ஷா நேற்று முன்தினம் இரவு ஈச்சங்காடு ரெயில் நிலையம் அருகே சென்று அந்த வழியாக வந்த ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். 

இதுகுறித்து தகவல் அறிந்த விருத்தாசலம் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அனோகி லாஷ்வா உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்