அமைச்சர் காமராஜ் குறித்து அவதூறு பரப்பியதாக தி.மு.க. ஊராட்சி மன்ற துணைத்தலைவர் கைது - மேலும் ஒருவருக்கு வலைவீச்சு

அமைச்சர் காமராஜ் குறித்து அவதூறு பரப்பியதாக தி.மு.க. ஊராட்சி மன்ற துணைத்தலைவரை போலீசார் கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய ஒருவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2020-11-27 22:00 GMT
நன்னிலம்,

திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகே உள்ள கொட்டூரை சேர்ந்த அ.தி.மு..க. பிரமுகரான சரவணன் என்பவர் பேரளம் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். புகாரில் பேரளம் பகுதியை சேர்ந்த தி.மு.க. கொட்டூர் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ராஜேஷ்(வயது38). கொள்ளாபுரத்தை சேர்ந்த ஹாஜா நஜ்முதீன்(45) ஆகிய இருவரும் சேர்ந்து அமைச்சர் காமராஜ் குறித்து வாட்ஸ்அப்பில் அவதூறாக செய்தி பரப்பியதாக தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தி.மு.க.வை சேர்ந்த ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ராஜேசை கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய ஹாஜா நஜ்முதீனை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்