உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் - அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. வழங்கினார்

உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைகளுக்கு அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தங்க மோதிரம் வழங்கினார்

Update: 2020-11-27 22:15 GMT
திருச்செந்தூர்,

தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தி.மு.க.வினர் நலத்திட்ட உதவிகள் வழங்கியும், கோவில்களில் வழிபாடு செய்தும், ரத்ததானம் வழங்கியும், பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தியும் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு தலைமை செயற்குழு உறுப்பினர் பில்லா ஜெகன் தலைமை தாங்கினார்.

தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு, அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த 15 குழந்தைகளுக்கு தங்க மோதிரமும், குழந்தைகளுக்கு பயன்படுத்தக்கூடிய பொருட்கள் மற்றும் பிரட் போன்றவை வழங்கினார். மேலும் ஒரு பெண் குழந்தைக்கு துர்க்கா என பெயர் சூட்டினார். நிகழ்ச்சியில், மாநில மாணவரணி துணை செயலாளர் உமரி சங்கர், மாவட்ட அவைத்தலைவர் அருணாச்சலம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், ஒன்றிய செயலாளர் இசக்கிபாண்டி, மாவட்ட துணை அமைப்பாளர் சுதாகர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்