ஈரோட்டில் அரசு அலுவலகங்கள் மூடப்பட்டன வங்கிகள் இயங்கவில்லை

ஈரோடு கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகங்களில் மட்டும் பேரிடர் மீட்பு கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு பணியாளர்கள் தயார் நிலையில் இருந்தனர்.

Update: 2020-11-26 14:26 GMT
ஈரோடு, 

நிவர் புயல் காரணமாக நேற்று தமிழகம் முழுவதும் தமிழக அரசு பொது விடுமுறை அறிவித்தது. எனவே நேற்று ஈரோட்டில் அரசு அலுவலகங்கள் எதுவும் திறக்கப்படவில்லை. ஈரோடு கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகங்களில் மட்டும் பேரிடர் மீட்பு கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு பணியாளர்கள் தயார் நிலையில் இருந்தனர்.

இதுபோல் வங்கிகள் அனைத்தும் நேற்று இயங்கவில்லை. வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளும் பேரிடர் மீட்பு பணிக்கு தயார் நிலையில் இருந்தனர்.

மேலும் செய்திகள்