விருத்தாசலம் பகுதியில் புயல் அச்சத்திலும் அசராமல் நடவு பணியில் ஈடுபட்ட விவசாயிகள்

விருத்தாசலம் பகுதி விவசாயிகள் புயல் அச்சத்திலும் அசராமல் நடவு பணியில் ஈடுபட்டனர்.

Update: 2020-11-26 12:06 GMT
விருத்தாசலம், 

நிவர் புயலால் பாதிப்புகள் ஏதும் ஏற்படாமல் இருக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி தீயணைப்பு துறை அதிகாரிகள், போலீசார், வருவாய்த்துறை, வேளாண்மைத்துறை, சுகாதாரத்துறை அதிகாரிகள் முன்னேற்பாடு பணிகளில் மிகவும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் தங்களது வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். இருப்பினும் அவர்கள் புயலால் பெரும் அச்சம் அடைந்துள்ளனர்.

சம்பா சாகுபடி

இதனிடையே நிவர் புயலை சிறிதும் பொருட்படுத்தாமல் விருத்தாசலம் பகுதி விவசாயிகள் தங்களது பணியில் வழக்கம்போல் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் புயல் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும், அசராமல் சம்பா சாகுபடி பணியை தொடங்கியுள்ளனர். அந்த வகையில் புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதை பயன்படுத்தி விருத்தாசலம் பகுதியான சாத்துக்கூடல் உள்ளிட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் பலர் தங்களது வயலில் நேற்று நாற்று நடவு பணியில் மும்முரமாக ஈடுபட்டனர். அவர்கள் கொட்டும் மழையிலும் குடைபிடித்தபடி நாற்று நட்டனர். 

மேலும் செய்திகள்