நிவர் புயல் எதிரொலி: விக்கிரவாண்டி அரசு பள்ளியில் பொதுமக்கள் தங்க வைப்பு
நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விக்கிரவாண்டி பேரூராட்சியில் தாழ்வான பகுதிகளான வ.உ.சி.நகர், பாரதி நகர், எம்.ஜி.ஆர். நகர், கக்கன் நகரில் வசிக்கும் பொதுமக்கள் அரசு மேல்நிலைப்பள்ளி கட்டிடங்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
விக்கிரவாண்டி,
நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விக்கிரவாண்டி பேரூராட்சியில் தாழ்வான பகுதிகளான வ.உ.சி.நகர், பாரதி நகர், எம்.ஜி.ஆர். நகர், கக்கன் நகரில் வசிக்கும் பொதுமக்கள் அரசு மேல்நிலைப்பள்ளி கட்டிடங்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். விக்கிரவாண்டி பேரூராட்சி செயல் அலுவலர் ஷேக்லத்தீப், வங்கி தலைவர் பூரணராவ், கூட்டுறவு சங்க துணைத்தலைவர் சங்கர், துப்புரவு ஆய்வாளர் விஸ்வநாதன், மேற்பார்வையாளர் ராமலிங்கம் ஆகியோர் கொண்ட குழுவினர் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தனர். முன்னதாக கடைவீதி மற்றும் பொதுமக்கள் கூடும் பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகைகளை பேரூராட்சி பணியாளர்கள் அகற்றினர்.