உசிலம்பட்டியில், விஷம் கொடுத்து சிறுமி கொலை - தற்கொலைக்கு முயன்ற தாய்க்கு தீவிர சிகிச்சை

8 வயது சிறுமிக்கு விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு தாய் தற்கொலைக்கு முயன்றார். அவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Update: 2020-11-26 04:45 GMT
உசிலம்பட்டி,

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி மாருதி நகரை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 30). இவரது மனைவி உஷா (25). இவர்களுடைய 8 வயது மகள் மகிமா.

மோகன்ராஜ் எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்ததுடன், மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதில் உஷா வாழ்க்கையில் வெறுப்படைந்தார்.

கடந்த 22-ந் தேதி தனது மகள் மகிமாவுக்கு விஷம் கொடுத்துவிட்டு தானும் விஷம் அருந்தினார். மயங்கிய நிலையில் கிடந்த தாய், மகளை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர்களுக்கு அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிறுமி மகிமா சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தாள். உஷாவுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின் பேரில் உசிலம்பட்டி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்