மராட்டியத்தில் புதிதாக 5,439 பேருக்கு கொரோனா மும்பையில் 939 பேருக்கு பாதிப்பு

மராட்டியத்தில் புதிதாக 5 ஆயிரத்து 439 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் மும்பையில் 939 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

Update: 2020-11-24 22:02 GMT
மும்பை, 

மராட்டியத்தில் நேற்று புதிதாக 5 ஆயிரத்து 439 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதனால் மாநிலத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 17 லட்சத்து 89 ஆயிரத்து 800 ஆக உயர்ந்து உள்ளது. நேற்று மட்டும் மாநிலத்தில் 4 ஆயிரத்து 86 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமாகினர்.

இதுவரை 16 லட்சத்து 58 ஆயிரத்து 879 பேர் ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பினர். தற்போது மாநிலம் முழுவதும் 83 ஆயிரத்து 221 பேர் வைரஸ் நோய்க்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

30 பேர் பலி

இதேபோல மராட்டியத்தில் மேலும் 30 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியாகி உள்ளனர். இதுவரை மாநிலத்தில் 46 ஆயிரத்து 683 பேர் வைரஸ் நோய்க்கு உயிரிழந்து உள்ளனர்.

மும்பையை பொறுத்தவரை புதிதாக 939 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 19 பேர் பலியாகி உள்ளனர். நகரில் இதுவரை 2 லட்சத்து 77 ஆயிரத்து 446 பேர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 10 ஆயிரத்து 706 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் செய்திகள்