திருப்பத்தூரில் குடிபோதையில் நடுரோட்டில் பெண் ரகளை

திருப்பத்தூரில் குடிபோதையில் நடுரோட்டில் பெண் ரகளையில் ஈடுபட்டனர்.

Update: 2020-11-23 05:33 GMT
திருப்பத்தூர், 

திருப்பத்தூர் புதுப்பேட்டை ரோடு அருகே 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் குடிபோதையில் திடீரென சாலையின் நடுவே நின்று கொண்டு, கையில் செருப்பு வைத்துக்கொண்டு அப்பகுதியில் வரும் பஸ், லாரி, கார் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தி ரகளை செய்ததோடு, ஆபாசமாக பேசிக் கொண்டிருந்தார்.

இதுபற்றி தகவலறிந்து திருப்பத்தூர் டவுன் போலீசார் விரைந்து வந்து அந்தப்பெண்ணிடம் விசாரிக்க சென்றனர். அவர்களையும் ஆபாசமாக பேசி கொண்டு இருந்தார்.

உடனடியாக அரசு மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் வரவழைத்து பெண் போலீசார் அவரை ஆம்புலன்சில் ஏற்ற முயன்றபோது மொத்த துணிகளையும் அவிழ்த்து விடுவேன் என எச்சரித்து அரை நிர்வாணத்தில் நின்றார். தொடர்ந்து 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு ஒரு வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் அந்தப் பெண்ணை அழைத்துச் சென்றுள்ளனர். அந்தப் பெண் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் யார் என தெரியவில்லை. அவர் மனநிலை பாதிக்கப்பட்டு உள்ளாரா? என்பதும் தெரியவில்லை. இதுகுறித்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்