ஸ்கூட்டரில் மதுபாட்டில்கள் கடத்தல் வாலிபர் கைது
கூடலூர், ஸ்கூட்டரில் மதுபாட்டில்களை கடத்தி வந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கூடலூர்,
கூடலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துமணி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் கணேசன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் குள்ளப்பகவுண்டன்பட்டி பிரிவு அருகே வாகன தணிக்கை செய்தனர் அப்போது வேகமாக வந்த ஒரு ஸ்கூட்டரை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். இதில் ஸ்கூட்டரை ஓட்டி வந்தவர், நாராயணத்தேவன்பட்டியை சேர்ந்த செல்வேந்திரன் (வயது 35) என்று தெரியவந்தது.
மேலும் அவர் ஸ்கூட்டரில் கொண்டு வந்த பையை போலீசார் சோதனை செய்தனர். அப்போது அதில் 106 மதுபாட்டில்கள் இருந்தது. இந்த மதுபாட்டில்களை அவர் குள்ளப்பகவுண்டன்பட்டி அருகே உள்ள டாஸ்மாக் கடையில் இருந்து வாங்கி வந்ததும், அவற்றை நாராயணத்தேவன்பட்டியில் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பதற்காக கொண்டு சென்றதும் தெரியவந்தது. இதனையடுத்து செல்வேந்திரனை போலீசார் கைது செய்தனர். மேலும் ஸ்கூட்டர், மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.