நன்னடத்தை உறுதிமொழியை மீறியவருக்கு 245 நாள் சிறை ஆர்.டி.ஓ. உத்தரவு

செங்கல்பட்டு மாவட்டம், நன்னடத்தை உறுதிமொழியை மீறியவருக்கு 245 நாள் சிறை ஆர்.டி.ஓ. உத்தரவு விடுத்துள்ளார்.

Update: 2020-11-21 02:10 GMT
வண்டலூர், 

செங்கல்பட்டு மாவட்டம் மண்ணிவாக்கம் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் பிரபா என்கிற பிரபாகரன் (வயது 39). இவர் மீது ஓட்டேரி போலீஸ் நிலையத்தில் 5-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இவர் தொடர் குற்றங்களில் ஈடுபட்டதால் ஒட்டேரி போலீசார் பிரபாகரன் மீது வழக்குப்பதிவு செய்து கடந்த ஜூலை மாதம் தாம்பரம் ஆர்.டி.ஓ.விடம் ஆஜர்படுத்தினர். அப்போது பிரபாகரன் 1 வருடம் பொது அமைதியை காப்பேன் என கூறி ரூ.50 ஆயிரம் பிணைய பத்திரத்தில் எழுதிகொடுத்து ஆர்.டி.ஓ.விடம் ஜாமீன் பெற்றார். இதற்கிடையில் சமீபத்தில் ஒரு வழக்கில் ஓட்டேரி போலீசார் பிரபாகரனை கைது செய்து செங்கல்பட்டு மாவட்ட சிறையில் அடைத்தனர். நன்னடத்தை விதிகளை மீறியதால் பிரபாகரன் மீது நடவடிக்கை எடுக்கும்படி தாம்பரம் ஆர்.டி.ஓ. ரவிச்சந்திரனிடம் ஒட்டேரி போலீசார் புகார் தெரிவித்தனர்.

இதனையடுத்து நன்னடத்தை விதியை மீறியதற்காக 245 நாட்கள் பிரபாகரனை சிறையில் அடைக்கும்படி தாம்பரம் ஆர்.டி.ஓ. உத்தரவிட்டார். இதனையடுத்து ஆர்.டி.ஓ.வின் உத்தரவு நகலைஓட்டேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் செங்கல்பட்டு மாவட்ட சிறைத்துறை அதிகாரியிடம் வழங்கினர்.

மேலும் செய்திகள்