மொபட் மீது கார் மோதல்: தனியார் நிறுவன மேற்பார்வையாளர் பலி

அவினாசி அருகே மொபட் மீது கார் மோதியதில் தனியார் நிறுவன மேற்பார்வையாளர் பலியானார். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

Update: 2020-11-19 16:15 GMT
அவினாசி,

திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்த அவினாசிலிங்கம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சாகுல்அமீது (வயது 47). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பாலிபேக் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக (சூப்பர்வைசர்) பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் நேற்றுகாலை மொபட்டில் தனது மகன் தமீம்அன்சாரியுடன் (13) அவினாசியில் உள்ள ஒரு பள்ளிவாசலில் தொழுகையில் கலந்துகொண்டார். பின்னர் தனது மகனுடன் மொபட்டில் அவினாசிலிங்கம்பாளையம் நோக்கி சென்றுகொண்டிருந்தார்.

அவினாசிலிங்கம்பாளையம் பிரிவு அருகே சென்றபோது அந்த வழியாக திருப்பூரிலிருந்து அவினாசி நோக்கி வேகமாக வந்த ஒரு கார் சாகுல்அமீது ஓட்டிச்சென்ற மொபட்டின் மீது மோதியது.

இதில் சாகுல்அமீதும், அவரது மகனும் நிலைதடுமாறி ரோட்டில் விழுந்தனர். இதில் பலத்த அடிபட்ட சாகுல் அமீதை அப்பகுதியிலிருந்த பொதுமக்கள் சிலர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அவினாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சாகுல் அமீதை பரிசோதனை செய்த டாக்டர், அவர் ஆஸ்பத்திரிக்கு வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார். படுகாயமடைந்த தமீம் அன்சாரி சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து அவினாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்