செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 112 பேர் பாதிப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 112 பேர் பாதிப்புக்குள்ளானார்கள்.

Update: 2020-11-18 00:50 GMT
வண்டலூர், 

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 112 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 46 ஆயிரத்து 146 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 44 ஆயிரத்து 536 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இது வரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 696 பேர் உயிரிழந்துள்ளனர். 914 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று 97 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர் .இதுவரை மாவட்டம் முழுவதும் 39 ஆயிரத்து 797 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 38 ஆயிரத்து 420 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 733 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரை 644 பேர் கொரானா தொற்றால் இறந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் ஒருவர் இறந்துள்ளார்.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 76 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26 ஆயிரத்து 899- ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 26 ஆயிரத்து 7 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இது வரை காஞ்சீபுரம் மாவட்டத்தில் 413 உயிரிழந்துள்ளனர். 479 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்