மராட்டியத்தில் புதிதாக 2 ஆயிரத்து 840 பேருக்கு கொரோனா 5 ஆயிரத்து 123 பேர் குணமடைந்தனர்

மராட்டியத்தில் புதிதாக 2 ஆயிரத்து 840 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதேவேளையில் 5 ஆயிரத்து 123 பேர் குணமடைந்தனர்.;

Update: 2020-11-17 22:55 GMT
மும்பை, 

மராட்டியத்தில் நவம்பர் மாத தொடக்கத்தில் இருந்தே கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. தொடர்ந்து மாநிலத்தில் தொற்று பாதிப்பு குறைந்து வருவது மக்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதில் நேற்று மாநிலத்தில் புதிதாக 2 ஆயிரத்து 840 பேருக்கு வைரஸ் நோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 லட்சத்து 52 ஆயிரத்து 509 ஆக உயர்ந்து உள்ளது.

மாநிலத்தில் தொற்று பாதிப்பில் இருந்து குணமானவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.

புதிதாக மாநிலத்தில் 5 ஆயிரத்து 123 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமாகி உள்ளனர். இதுவரை மாநிலம் முழுவதும் 16 லட்சத்து 23 ஆயிரத்து 503 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமாகி ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது மராட்டியத்தில் 81 ஆயிரத்து 925 பேர் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த மாதம் வரை மாநிலத்தில் சுமார் 2 லட்சம் பேர் நோய் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.

68 பேர் பலி

மாநிலத்தில் ஆட்கொல்லி நோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. இதில் மாநிலத்தில் புதிதாக 68 பேர் வைரஸ் நோய்க்கு பலியாகினர். இவரை மாநிலம் முழுவதும் 46 ஆயிரத்து 102 பேர் தொற்றுக்கு உயிரிழந்து உள்ளனர்.

மராட்டியத்தில் இதுவரை 98 லட்சத்து 47 ஆயிரத்து 478 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 17.8 சதவீதம் பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நோய் பாதித்தவர்களில் 92.64 சதவீதம் பேர் குணமடைந்து உள்ளனர். 2.63 சதவீதம் பேர் பலியாகி உள்ளனர்.

மேலும் செய்திகள்