சித்தானந்தர் கோவிலில் குரு பெயர்ச்சி விழா

குருபகவான் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு பிரவேசித்ததையொட்டி கருவடிக்குப்பம் சித்தானந்தர் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Update: 2020-11-16 00:20 GMT
புதுச்சேரி, 

குருபகவான் ஒரு முழு சுபகிரகம் ஆவார். ஒருவரது ஜாதகத்தில் மிக கடுமையான பாவங்களால் ஏற்படக்கூடிய விளைவுகளை கூட தனது பார்வை பலத்தால் காப்பாற்றும் சக்தியாக குருபகவான் விளங்குகிறார். அதனால் தான் குரு பார்க்க கோடி நன்மை என்பதும், குரு பார்க்க கோடி தோஷம் விலகும் என்பதும் ஐதீகம் ஆகும். எல்லா கோவில்களிலும் சிவபெருமானின் ஞானவடிவான தட்சிணாமூர்த்தியையே குருவாக பாவித்து வழிபடப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு குருபகவான் பெயர்ச்சி ஆவார். அதன்படி இந்த ஆண்டு நேற்று இரவு 9.48 மணிக்கு குருபகவான் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார்.

சித்தானந்தர் கோவில்

இதையொட்டி புதுவை கருவடிக்குப்பத்தில் உள்ள சித்தானந்தர் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா நேற்று மாலை 6.15 மணிக்கு கலக பிரதிஷ்டையுடன் தொடங்கியது. இரவு 7 மணிக்கு கணபதி ஹோமமும் தொடர்ந்து நவக்கிரஹ ஹோமமும், 8.45 மணிக்கு குருவிற்கு மகா அபிஷேகமும், இரவு 9.48 மணிக்கு மகா தீபாராதனையும் நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்