சென்னையில் தீபாவளியன்று காற்று - ஒலி மாசு குறைவு
சென்னையில் தீபாவளியன்று மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் காற்று மாசில் பெரியளவில் மாற்றம் ஏற்படவில்லை என்று மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
சென்னை,
சென்னையில் கடந்த தீபாவளியைக்காட்டிலும் இந்த ஆண்டு காற்று, ஒலி மாசு குறைந்துள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. மேலும் கடந்த ஆண்டிடை விட ஒலி மாசு 4 முதல் 6 டெசிபல் வரை குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளதாகவும் சென்னை சவுக்கார்ப்பேட்டை, திருவல்லிக்கேணியில் மட்டும் காற்றின் தரக்குறியீடு 97லிருந்து 107ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கார்ப்பன் டை ஆக்சைடு, நைட்ரஜன் டை ஆக்சைடு அளவு நிர்ணையிக்கப்பட்டதை விட குறைவாகவே இருந்தது.