தந்தை இறந்த சோகத்தில் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

சிப்காட் அருகே தந்தை இறந்த சோகத்தில் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.

Update: 2020-11-14 21:30 GMT
சிப்காட்(ராணிப்பேட்டை),

சிப்காட் அருகே உள்ள புளியந்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் முனுசாமி. இவர், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்து விட்டார். அவருக்கு மனைவி, இரு மகள்கள், ஒரு மகன் உண்டு. மகன் பிரித்திவிராஜ் ஆற்காடு அருகில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

தந்தை இறந்த சோகத்தில் இருந்து வந்த அவர் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாதபோது, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சிப்காட் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பிரித்திவிராஜின் பிணத்தைக் கைப்பற்றி வாலாஜா அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

 இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்