விளாத்திகுளம் அருகே கார்- மோட்டார்சைக்கிள் மோதல்; 2 வாலிபர்கள் பலி

விளாத்திகுளம் அருகே நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் பரிதாபமாக இறந்தனர்.;

Update: 2020-11-13 16:52 GMT
விளாத்திகுளம், 

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் இ.வேலாயுதபுரத்தை சேர்ந்தவர் பட்டாணி மகன் கார்த்திக் (வயது 23). அதே பகுதியை சேர்ந்தவர் முனியசாமி மகன் முனிஸ்குமார் (22).

இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் குளத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

கார் மோதி சாவு

குளத்தூரை அடுத்த கலைஞானபுரம் அருகில் கிழக்கு கடற்கரை சாலையில் சென்றபோது, அந்த வழியாக வந்த கர்நாடக பதிவு எண் கொண்ட கார் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் கார்த்திக், முனிஸ்குமார் ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் குளத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, அவர்களது உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணை

விபத்து நடந்ததும் காரில் வந்தவர்கள் அங்கேயே காரை நிறுத்திவிட்டு தப்பி ஓடி விட்டனர். இந்த விபத்து குறித்து குளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்