ரூ.62 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை சானிட்டரி நாப்கினில் கடத்திய 2 பெண்கள் கைது

கோயம்புத்தூர் விமான நிலையத்தில் ரூ.62 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை சானிட்டரி நாப்கினில் மறைத்து எடுத்து வந்த 2 பெண்களை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

Update: 2020-11-13 08:43 GMT
கோவை

சார்ஜாவில் இருந்து கோவை வந்த ஏர்அரேபியா விமானத்தில் வந்த பயணிகளை கலால் துறை அதிகாரிகள் வழக்கமான சோதனைக்கு உட்படுத்தினர். அப்போது சந்தேகத்திற்கு இடமான இரண்டு பெண் பயணிகளை சோதனையிட்ட போது, பேஸ்ட் வடிவில் மாற்றி சானிட்டரி பேடில் வைத்து கடத்தி வந்த தங்கம் சிக்கியது. அவர்கள் இருவரும் தங்கத்தை பேஸ்ட் வடிவில் மாற்றி உள்ளாடையில் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிகப்பட்டது.

இதனையடுத்து அவர்களிடம் இருந்து 62 லட்சத்து 66 ஆயிரம் ரூபாய் மதிப்புடைய 1.2 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், விசாரணையில் சானிட்டரி நாப்கினில் பேஸ்ட் வடிவில் மாற்றி தங்கத்தை கடந்தி வந்த பெண் பயணிகள் சென்னையை சேர்ந்த தெய்வானை மற்றும் புதுக்கோட்டையை சேர்ந்த வசந்தி என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்